மதுராந்தகத்தில் இ.பரந்தாமன், தாராபுரத்தில் எஸ்.சுகன்யா: வேட்பாளர்களை அறிவித்தது திமுக

இ.பரந்தாமன் (இடது), எஸ்.சுகன்யா (வலது) -திமுக வேட்பாளர்கள்

இ.பரந்தாமன் (இடது), எஸ்.சுகன்யா (வலது) -திமுக வேட்பாளர்கள்

Updated on
1 min read

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் அத்தொகுதிகளுக்கான வேட்பாளர்களை திமுக அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வருகிற 06-10-2026 அன்று நடைபெற உள்ள மதுராந்தகம் (தனி) சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் வழக்கறிஞர் ஐ.பரந்தாமன், தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில்மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் வழக்கறிஞர் எஸ். சுகன்யா ஆகியோர் திமுக சார்பில் போட்டியிடுவார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைத் தேர்தலில் திமுக போட்டியிடுவது குறித்து உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, கனிமொழி உள்ளிட்ட நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. இடைத் தேர்தல் வேட்புமனு தொடங்கிய நாளிலேயே திமுக வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் சூழல் காரணமாக அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

அதி​முக எம்​எல்​ஏ-க்​களாக தேர்ந்​தெடுக்​கப்​பட்ட மதுராந்தகம் மரகதம் குமர​வேல், தாராபுரம் சத்​தி​ய​பா​மா, பெருந்​துறை ஜெயக்​கு​மார், அம்​பாச​முத்​திரம் இசக்கி சுப்பை​யா, விராலிமலை சி.​விஜய​பாஸ்​கர், கரூர் எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர் ஆகியோர் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினமா செய்வதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் கடிதம் கொடுத்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இவர்​களின் ராஜி​னா​மாவை பேர​வைத் தலை​வர் ஜே.சி.டி. பிரபாகர் ஏற்​றுக் கொண்​டதையடுத்து அந்த தொகு​தி​கள் காலி​யான​தாக அறிவிக்​கப்​பட்​டன.

இந்நிலையில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று அறிவிக்கப்பட்டது.

இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களே வெற்றி பெற்று இருந்ததால் இடைத்தேர்தலில் அதிமுக களமிறங்குகிறது. அதனால் ஆளும் தவெக, திமுக, அதிமுக ஒருவேளை நாதகவும் போட்டியிட்டால் இத்தொகுதியில் 4 முனைப் போட்டி நிலவக்கூடும்.

தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் நடைபெறும் முதல் இடைத்தேர்தல் இதுவென்பதால் தவெகவும் கூடுதல் சிரத்தையோடு வெற்றியை உறுதி செய்து நாற்காலியை இன்னும் வலுப்படுத்திக் கொள்ள விழையும் என்பதில் சந்தேகமில்லை என்கின்றனர் நிபுணர்கள்.

<div class="paragraphs"><p>இ.பரந்தாமன் (இடது), எஸ்.சுகன்யா (வலது) -திமுக வேட்பாளர்கள்</p></div>
“3.25 லட்சம் பேர் உயிரிழப்பு; புகைத் தடை சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்” - அன்புமணி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in