மதுராந்தகம், தாராபுரம் எம்எல்ஏக்கள் பதவியேற்பு: தவெக பலம் 109 ஆக உயர்வு

மதுராந்தகம், தாராபுரம் எம்எல்ஏக்கள் பதவியேற்பு: தவெக பலம் 109 ஆக உயர்வு
Updated on: 
1 min read

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற தவெக எம்எல்ஏக்கள் இன்று சபாநாயகர் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.

நடந்து முடிந்த மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட்ட தவெக வேட்பாளர்களான மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் வெற்றிபெற்றனர். இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் கடந்த அக். 9ம் தேதி வெளியானது.

இதனை தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மதுராந்தகம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக மரகதம் குமரவேல், தாராபுரம் எம்எல்ஏவாக சத்தியபாமா ஆகியோர் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.

தவெக எம்எல்ஏக்களாக இருவரும் பதவியேற்றுக் கொண்ட நிகழ்வின்போது, அமைச்சர்கள் ஆனந்த், செங்கோட்டையன், அருண்ராஜ், ராஜ்மோகன் ஆகியோர் உடன் இருந்தனர். இவர்கள் இருவரும் எம்எல்ஏக்களாக பதவியேற்றுக் கொண்டதால் தமிழக சட்டப்பேரவையில் தவெகவின் பலம் 109 ஆக அதிகரித்துள்ளது.

மதுராந்தகம், தாராபுரம் எம்எல்ஏக்கள் பதவியேற்பு: தவெக பலம் 109 ஆக உயர்வு
பேரணிக்கு முன்பாக இண்டியா கூட்டணிக்கு பின்னடைவு: தலைவர்களை சந்திக்க தலைமை நீதிபதி மறுப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in