மோசடியாகப் பத்திரப் பதிவு, பட்டா மாற்றி ரூ.60 கோடி மதிப்புள்ள மதுரை மீனாட்சி கோயில் நிலம் அபகரிப்பு

முன்னாள் சார் பதிவாளர், வட்டாட்சியர், விஏஓ உட்பட 19 பேர் மீது வழக்கு
மோசடியாகப் பத்திரப் பதிவு, பட்டா மாற்றி ரூ.60 கோடி மதிப்புள்ள மதுரை மீனாட்சி கோயில் நிலம் அபகரிப்பு
Updated on
2 min read

மதுரை: மதுரை மீனாட்சி அம்​மன் கோயிலுக்​குச் சொந்​த​மான ரூ.60 கோடி மதிப்​புள்ள நிலம் மோசடி​யாக விற்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக முன்​னாள் சார் பதி​வாளர்​கள், வட்​டாட்​சி​யர், விஏஓ உட்பட 19 பேர் மீது வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

மதுரை மீனாட்சி அம்​மன் கோயிலுக்​குப் பாண்​டிய மன்​னர்​கள், விஜய நகரப் பேரரசர்​கள், கர்​நாடக மன்​னர்​கள் உட்பட பலர் ஏராள​மான நிலங்​களை நன்​கொடை​யாக வழங்கி உள்​ளனர். அதற்​காகப் பல்​வேறு கட்​டளை​களை​யும் ஏற்​படுத்தி உள்​ளனர். அந்​தக் கட்​டளை​களில் ஒன்​று​தான். புதுக்​கோட்டை ராஜகு​மாரர் தட்​சிணா​மூர்த்தி துரை ராஜா, துரை ராணி அறக்​கட்​டளை. இந்த அறக்​கட்​டளை சார்​பில் கடந்த 1930 ஜூன் 6-ம் தேதி சென்னை சைதாப்​பேட்டை சார் பதி​வாளர் அலு​வல​கத்​தில் உயில் ஒன்று பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

அதில், மதுரை மீனாட்சி அம்​மன் கோயில், அழகர் கோவிலுக்​குத் தர்ம காரி​யங்​கள் செய்ய மதுரை அழகர் கோவில் ரோடு, பிபீகுளம் ஹக்​கிம் அஜ்மல் கான் சாலை​யில் உள்ள 1.79 ஏக்​கர் (0.72640 சதுர மீட்​டர்) ‘அசோக விலாஸ்’ பங்​களா மற்​றும் தோட்​டம் ஆகிய சொத்​துகள் எழுதி வைக்​கப்​பட்​டுள்​ளன. இந்​தச் சொத்​துகள் மூலம் கிடைக்​கும் வரு​வா​யில், கோயில் டிரஸ்​டிகள், மீனாட்சி அம்​மன் கோயில், கள்​ளழகர் கோயில், முக்குறுணி விநாயகர் கோயிலில் சிறப்பு அர்ச்​சனை, நெய்​வே​தி​யம், பக்​தர்​களுக்​குப் பிர​சாதம் வழங்க வேண்​டும். அழகர் கோவில் கருப்​பண​சாமிக்​குச் சந்​தனக் கும்பா எடுக்க

வேண்​டும்.

இந்​துக் கல்​லூரி​யில் இன்​டர்​மீடியட் வகுப்​பில் சேரும் 2 ஏழை மாணவர்​களுக்கு கல்விக் கட்​ட​ணம், ஆண்​டு​தோறும் 100 ஏழைகளுக்கு அன்​ன​தானம் வழங்க வேண்​டும். இதற்​காக அசோக விலாஸ் பங்​களா, தோட்​டத்தை வாடகைக்கு மட்​டுமே விட​வேண்​டும். கிர​யம், அடமானம், ஒத்தி போன்ற எந்த செயலும் செய்ய கூடாது என்று அந்த உயி​லில் நிபந்​தனை​கள் குறிப்​பிடப்​பட்​டுள்​ளன.

இந்​நிலை​யில், 2016 ஜூன் 24-ம் தேதி கோயில் பெயரில் இருந்த அந்த சொத்​தை வெள்​ளைச்​சாமி பல்​ல​வ​ராயர் மனைவி ராமாயி ஆயி​யார் உட்பட 9 பேரின் பெயருக்கு மதுரை வடக்கு வட்​டாட்​சி​யர் பட்டா மாறு​தல் செய்து கொடுத்​துள்​ளார். புகாரின் அடிப்படையில், வட்​டாட்​சி​யர் மீது துறைரீ​தி​யாக நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது.

சம்​பந்​தப்​பட்ட விஏஓ பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டார். கோட்​டாட்​சி​யர் விசா​ரணை அடிப்​படை​யில் வட்​டாட்​சி​யரின் உத்​தரவு ரத்து செய்​யப்​பட்டு மீண்​டும் கோயில் பெயருக்கு பட்டா மாற்​றம் செய்​யப்​பட்​டது.

இதுதொடர்பாக உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் உத்​தர​வும் பெறப்​பட்​டது. மேற்​படி சொத்​துகளைப் பாது​காக்​க எவ்​வித பட்டா பதி​வும் கோயில் அனு​ம​தி​யின்றி செய்​யக் கூடாது என்று மதுரை சொக்​கி​ குளம் சார் பதி​வாளர் அலு​வலகத்​துக்​கும், மாவட்​டப் பதி​வாளர் அலு​வல​கத்​துக்​கும் உத்தரவிடப்பட்டது.

இந்​நிலையில், கடந்த 2018 ஆக.13-ம் தேதி பட்​டா​வில் உள்ள கோயில் பெயரை நீக்​கி​விட்டு புதுக்​கோட்டை மாவட்​டம், கறம்​பக்​குடியைச் சேர்ந்த வெள்​ளைச்​ சாமி மனைவி ராமா​யி, தஞ்​சாவூர் சிலத்​தூர் மேலத்​தெரு செந்​தமிழ்ச் செல்​வி, புதுக்​கோட்டை பிலா​விடுதி அம்​மானிப்​பட்டு பிரே​மா, புதுக்​கோட்டை மச்​சு​வாடி முத்​து​ராணி, வெள்​ளைச்​சாமி மகன்​கள் ராஜ்கு​மார், ராஜேந்​திரன், குழந்​தை​யா, புஷ்ப​ராஜ் மற்​றும் புதுக்​கோட்டை மாவட்​டம் ஒடுக்​கூர் சின்​னப்பா மனைவி ஜோதி, புதுக்​கோட்டை வடக்​கு​ராஜ வீதி நாராயண​சாமி மனைவி கீதா ஆகிய 10 பேரும் மீனாட்சி கோயிலுக்கு சொந்​த​மான சொத்தை மீண்டும் விற்​றுள்​ளனர்.

கடந்த 2021 மார்ச் 22 தூத்​துக்​குடி மாவட்​டம், முறப்​ப​நாடு சார் பதி​வாளர் அலு​வல​கத்​தில் உசிலம்​பட்டி சுப்​பிரமணி மகன் இளை​ய​ராஜா, திரு​வள்​ளுர் ராமபுரம் பிர​காஷ் மகன் அனிஷ் ஆகியோ​ருக்கு அவர்​கள் பத்​திரப் பதிவு செய்து கொடுத்​துள்​ளனர். இந்த ஆவணத்​தைப் பயன்​படுத்தி இளை​ய​ராஜா, அனீஷ் ஆகியோர் இளை​ய​ராஜா மனைவி கவி​தா, பிர​காஷ், திண்​டுக்​கல் சிறுமலை பாஸ்​கரன் மகன் காளிக்​கு​மார் ஆகியோ​ருக்கு திண்​டுக்​கல் வட மதுரை சார் பதி​வாளர் அலு​வல​கத்​தில் அடமானப் பத்​திரம் பதிவு செய்து கொடுத்​துள்​ளனர்.

இதுகுறித்து அறிந்ததும் அவர்​கள் மீது நடவடிக்கை எடுக்க மீனாட்சி அம்​மன் கோயில் இணை ஆணை​யர் செல்​லத்​துரை, மதுரை மாநகர காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் ஜூலை 25-ல் புகார் கொடுத்​தார். இதையடுத்து ஆணை​யர் ராஜேந்​திரன் உத்​தர​வின்​படி, மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் விசா​ரணை நடத்​தினர்.

இதைத் தொடர்ந்து மோசடி​யில் ஈடு​பட்​ட​தாக ராமாயி ஆயி​யார், செந்​தமிழ்ச் செல்​வி, பிரே​மா, ராஜ்கு​மார், முத்​து​ராணி, ராஜேந்​திரன், குழந்​தையா, புஷ்ப​ராஜ், ஜோதி, கீதா, மதுரை பிபீகுளம் முன்​னாள் விஏஓ அரசன், முன்​னாள் வட்​டாட்​சி​யர் அன்​பழகன், உசிலம்​பட்டி இளை​ய​ராஜா, அனீஷ், முறப்​ப​நாடு முன்​னாள் சார் பதி​வாளர் அனந்​த​ராமன், கவி​தா, பிர​காஷ், சிறுமலை காளிக்​கு​மார், முன்​னாள் வட மதுரை

சார் பதி​வாளர் பிர​சாந்த் சந்தன கருப்​பன் ஆகிய 19 பேர் மீதுமோசடி (420), கூட்​டுச்சதி 120(பி) ஆகிய சட்​டப்​பிரிவு​களில் எஸ்ஐ கண்​ணன் வழக்​குப் பதிவு செய்​துள்​ளார். மோசடி செய்த சொத்​துகளின் மதிப்பு சுமார் ரூ.60 கோடிக்கு மேல் இருக்​கும் என போலீஸ் தரப்​பில் கூறப்​படு​கிறது.

இதுகுறித்து மேலும் தகவல் அறிய செல்​லத்​துரையைப் போனில் தொடர்பு கொண்ட போது அவர் அழைப்பை ஏற்​க​வில்​லை. பழநி கோயிலுக்​குச் சொந்​த​மான ரூ.100 கோடி மதிப்​புள்ள நிலம் மோசடி செய்​யப்​பட்​டநிலை​யில்​, மீனாட்​சி கோயில்​ நில​மும்​ மோசடி செய்​யப்​பட்​ட தகவல்​ கூடு​தல்​ அதிர்​ச்​சியை ஏற்​படுத்​தி உள்​ளது.

மோசடியாகப் பத்திரப் பதிவு, பட்டா மாற்றி ரூ.60 கோடி மதிப்புள்ள மதுரை மீனாட்சி கோயில் நிலம் அபகரிப்பு
மேகேதாட்டு விவகாரத்தில் மத்திய இணை அமைச்சரின் பதிலை திரும்பப் பெறுக: பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in