“விஜய்யால் திமுக கூட்டணி வெற்றியை தடுக்க முடியாது” - மு.வீரபாண்டியன் உறுதி

நாகையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்றோர்.

நாகையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்றோர்.

Updated on
1 min read

நாகப்பட்டினம்: விஜய் தனித்து வந்தாலும், கூட்டணியுடன் வந்தாலும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணுவின் 101-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நாகை அவுரித்திடலில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர் சிவகுரு.பாண்டியன் தலைமை வகித்தார். கூட்டத்தில். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், நாகை எம்.பி. வை.செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் நாகை, கீழ்வேளூர், கீழையூர், திருமருகல், தலைஞாயிறு, வேதராண்யம் ஒன்றியங்களைச் சேர்ந்த திரளான கம்யூனிஸ்ட் கட்சியினர் பங்கேற்றனர்.

பின்னர், மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியது: வெனிசுலா அதிபரை அமெரிக்க அரசு கைது செய்து சிறையில் அடைத்திருப்பதற்கு இந்திய நாடாளுமன்றமும், பிரதமரும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

தமிழக அரசின் மடிக்கணினி கொடுக்கும் திட்டத்தை அரசியலாக்குவது சரியல்ல. நீதிமன்றமே என்றாலும் சாதி, மதம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் தீர்ப்பளிக்கும்போது, அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆனால், திருப்பரங்குன்றம் கோயில் விவகாரம் குறித்த தீர்ப்பில் நீதிமன்றம் இதை கவனத்தில் கொள்ள தவறிவிட்டது. ஊழலை பற்றி பேசும் தார்மீக பொறுப்பை அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி இழந்து விட்டார்.

விஜய் தனித்து வந்தாலும், கூட்டணியுடன் வந்தாலும், ஒருமுனை போட்டி என்றாலும், 5 முனை போட்டி என்றாலும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

மத்திய பாஜக அரசு, விஜயை மட்டுமல்ல, நீதித் துறை, சட்டத்தையும் தன்வசம் வைத்துக்கொள்ள பார்க்கிறது. இதுதான் பேராபத்து. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>நாகையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்றோர். </p></div>
“அதிமுக உடன்தான் தேமுதிக கூட்டணி அமைக்கும்” - ராஜேந்திர பாலாஜி உறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in