“அதிமுக உடன்தான் தேமுதிக கூட்டணி அமைக்கும்” - ராஜேந்திர பாலாஜி உறுதி

விருதுநகர் அருகே புல்லலக்கோட்டையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி.

விருதுநகர் அருகே புல்லலக்கோட்டையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி.

Updated on
1 min read

விருதுநகர்: அதிமுகவோடுதான் தேமுதிக கூட்டணி அமைக்கும் என்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். விருதுநகர் அருகே உள்ள புல்லலக் கோட்டையில் தேவாலயத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பங்கேற்றார்.

அப்போது, கிறிஸ்தவ மிஷினரி இயக்கத்தின் பொறுப்பாளர் டேவிட் கணேசனை சந்தித்து பேசினார். பின்னர் கே.டி.ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது: புல்லலக்கோட்டை தேவாலயத்தில் கிறிஸ்தவ மிஷினரி இயக்கம் பல சேவைகளை செய்து வருகிறது.

வலுவான கூட்டணியை அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அமைப்பார். பழனிசாமி தனது சாதுர்யமான நடவடிக்கைகள் மூலம் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராக பொறுப்பேற்பார். அதிமுக அமோக வெற்றி பெறும்.

அதிமுகவோடுதான் தேமுதிக கூட்டணி அமைக்கும். பிரேமலதா தனது கணவரின் கொள்கைக்கு எதிராக செல்ல மாட்டார். கரூரில் 41 பேர் உயிரிழந்த நேரத்தில் விஜய் அங்கு இருந்ததால்தான், அவரை விசாரிக்க சிபிஐ அழைத்துள்ளது.

திமுகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கருத்து மோதல் உள்ளது. ஆட்சியில் அதிகாரம் வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. பகிரங்கமாக குரல் கொடுத்துள்ளார். திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்பட வாய்ப்புள்ளது.

தமிழகத்தை பொருத்தமட்டில் தனிப் பெரும்பான்மை பெற்ற கட்சியின் ஆட்சிதான் நடைபெறும். அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>விருதுநகர் அருகே புல்லலக்கோட்டையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி.</p></div>
“எங்கள் கூட்டணியில் விஜய் சேர்ந்தால் அசைக்க முடியாத சக்தியாக மாறுவார்” - தமிழிசை கணிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in