ஆற்று மணல் பதுக்கி வைத்திருந்ததாக வழக்கு: எம்.ஆர்.விஜயபாஸ்கர் சரணடைய ஏப்.28 வரை அவகாசம்

ஆற்று மணல் பதுக்கி வைத்திருந்ததாக வழக்கு: எம்.ஆர்.விஜயபாஸ்கர் சரணடைய ஏப்.28 வரை அவகாசம்
Updated on
1 min read

சென்னை: சட்​ட​விரோத​மாக ஆற்று மணலை பதுக்கி வைத்​திருந்​த​தாக பதி​யப்​பட்ட வழக்​கில் நீதி​மன்​றத்​தில் சரணடைய முன்​னாள் அமைச்​ச​ரான எம்​.ஆர்.விஜய​பாஸ்​கருக்கு ஏப்​.28 வரைஅவகாசம் வழங்கி உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

ஆற்று மணலை சட்​ட​விரோத​மாக உரிய ஆவணங்​கள் இல்​லாமல் பதுக்கி வைத்​திருந்​த​தாக அதி​முகவைச் சேர்ந்த முன்​னாள் அமைச்​சரும், கரூர் அதி​முக வேட்​பாள​ரு​மான எம்​.ஆர்​.விஜய​பாஸ்​கர் மீது கரூர் டவுண் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​திருந்​தனர்.

இந்த வழக்​கில் அவருக்கு நிபந்​தனை முன்​ஜாமீன் வழங்​கிய கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதி​மன்​றம், சம்​பந்​தப்​பட்ட குற்​ற​வியல் நடு​வர் நீதி​மன்​றத்​தில் சரண் அடைய மார்ச் 31 வரை அவகாசம் வழங்​கி​யிருந்​தது.

இந்த காலக்​கெடுவை நீட்​டிக்​கக்​கோரி விஜயபாஸ்கர் தரப்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனுத் தாக்​கல் செய்​யப்​பட்​டது. அதில், கரூர் தொகு​தி​யில் அதி​முக சார்​பில் வேட்​பாள​ராக போட்​டி​யிடு​வ​தால் மார்ச் 30 அன்று வேட்பு மனு தாக்​கல் செய்​த​தா​லும், மார்ச் 31 அன்று மகாவீர் ஜெயந்தி விடு​முறை என்​ப​தா​லும் நீதி​மன்​றத்​தில் சரணடைய முடிய​வில்​லை.

எனவே இந்த அவகாசத்தை நீட்​டிக்க வேண்​டும் எனக் கோரப்​பட்​டிருந்தது. இந்த மனுவை விசா​ரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்​தி​ரா, மனு​தா​ர​ரான எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர் நீதி​மன்​றத்​தில் சரண் அடைவதற்​கான அவகாசத்தை ஏப்​.28-ம் தேதி வரை நீட்​டித்து உத்​தர​விட்​டுள்​ளார்.

மேலும் ஏப்​.29, ஏப்​,30 மற்​றும் மே 1 ஆகிய தேதி​களில் சம்​பந்​தப்​பட்ட காவல் நிலை​யத்​தில் காலை 10.30-க்கு ஆஜராகி கையெழுத்​திட வேண்​டும் என்​றும் நிபந்​தனை விதித்​துள்​ளார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in