குளறுபடிக்கு தீர்வு காணும் வரை மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை தாம்பரத்தில் புதிதாக திறக்கப்பட்ட நூலகம் மற்றும் பாளையங்கோட்டை சிறையில் உள்ள கைதிகளுக்கு 5 ஆயிரம் புத்தகங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

சென்னை தாம்பரத்தில் புதிதாக திறக்கப்பட்ட நூலகம் மற்றும் பாளையங்கோட்டை சிறையில் உள்ள கைதிகளுக்கு 5 ஆயிரம் புத்தகங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

Updated on
1 min read

சென்னை: ‘குளறுபடிக்குத் தீர்வு காணும் வரை மின்கட்டணம் செலுத்த நுகர்வோர்களுக்கு காலஅவகாசம் வழங்க வேண்டும்’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்ப தாவது:

பொதுமக்கள் குமுறல்

புதிய ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல் தான். முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை. 3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாக புகார் அளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பொதுமக்களின் குமுறலைப் பார்க்கும்போது, பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் பலமடங்கு இருக்கக்கூடும் என்பது உறுதியாகிறது. இந்த குளறுபடிகள் ஆய்வு செய்யப்பட்டு தீர்வு காணப்படும் வரை, மின்கட்டணம் செலுத்துவதற்கான காலஅவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும்.

இனிவரும் காலங்களில், மின்சாரப் பயன்பாட்டை கணக்கெடுக்கும் ரீடிங்சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.

புத்தகங்கள் வழங்க தயார்

முதல்வராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது தனக்கு வந்த புத்தகங்களை பாளையங் கோட்டை சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்காகவும், தாம்பரத்தில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள நூலகத்துக்காகவும் 5 ஆயிரம் புத்தகங்களை வழங்கினார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இதுவரை 6 லட்சம் புத்தகங்கள் தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள நூலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளேன்.

புத்தகங்கள் தேவைப்படும் கல்வி நிறுவனங்கள், நூலகத்தினர், படிப்பகத்தினர் கடிதம் எழுதினால் அவர்களுக்கும் புத்தகங்களை வழங்கத் தயாராக இருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

<div class="paragraphs"><p>சென்னை தாம்பரத்தில் புதிதாக திறக்கப்பட்ட நூலகம் மற்றும் பாளையங்கோட்டை சிறையில் உள்ள கைதிகளுக்கு 5 ஆயிரம் புத்தகங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.</p></div>
மேகேதாட்டு விவகாரத்தில் முதல்வர் விஜய் ஒரு வாரத்தில் முக்கிய முடிவு: அமைச்சர் நிர்மல்குமார் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in