தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போகிறது: 28 மாவட்டங்களிலும் தனி அலுவலர்கள் பதவிக்காலம் நீட்டிப்பு

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அலுவலர்கள் நியமனம்
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போகிறது: 28 மாவட்டங்களிலும் தனி அலுவலர்கள் பதவிக்காலம் நீட்டிப்பு
Updated on: 
2 min read

தமிழகத்​தில் 28 மாவட்​டங்​களில் ஊரக உள்​ளாட்சி அமைப்​பு​களுக்​கான தனி அலு​வலர்​கள் பத​விக்​காலத்தை 6 மாதங்​களுக்கு நீட்​டித்​துள்ள தமிழக அரசு, செங்​கல்​பட்டு, காஞ்​சிபுரம், தென்​காசி, திருநெல்​வேலி உட்​பட 9 மாவட்​டங்​களில் ஊரக உள்​ளாட்​சிகளுக்​கும் தனி அலு​வலர்​களை நியமித்து உத்​தர​விட்​டுள்​ளது.

வார்டு மறு வரையறை உள்​ளிட்ட பணிகள் முடிவடை​யாமல் இருப்​ப​தால் உள்​ளாட்​சித் தேர்​தல் தள்​ளிப்​போகிறது. தமிழகத்​தில் 28 மாவட்​டங்​களில் கிராம ஊராட்​சிகள், ஊராட்சி ஒன்​றியம் மற்​றும் மாவட்ட ஊராட்​சிகளின் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட மக்​கள் பிரதி​நி​தி​களின் பத​விக்​காலம் கடந்த 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ம் தேதி​யுடன் முடிவடைந்​தது. இதையடுத்து, ஊரக உள்​ளாட்சி அமைப்​பு​களை நிர்​வகிப்​ப​தற்​காக, தனி அலு​வலர்​கள் நியமிக்​கப்​பட்​டனர். அதன்​பின், தொடர்ந்து அவர்​களின் பத​விக்​காலம் நீட்​டிக்​கப்​பட்டு வந்​தது.

இந்​நிலை​யில், 28 மாவட்​டங்​களில் உள்ள கிராம ஊராட்​சிகள், ஊராட்சி ஒன்​றியம் மற்​றும் மாவட்ட ஊராட்​சிகளில் தனி அலு​வலர்​கள் பத​விக்​காலம் கடந்த அக்.19-ம் தேதி​யுடன் முடிவடைந்​தது. இதையடுத்து, இந்த 28 மாவட்​டங்​களில் தனிஅலு​வலர்​கள் பத​விக்​காலத்தை 2027-ம் ஆண்டு ஏப்​ரல் 19-ம் தேதி வரை நீட்​டித்து தமிழக அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

அதேநேரத்​தில், பிரிக்​கப்​பட்ட மற்​றும் புதிதாக உரு​வாக்​கப்​பட்ட காஞ்​சிபுரம், செங்​கல்​பட்டு, விழுப்​புரம், கள்​ளக்​குறிச்சி, வேலூர், ராணிப்​பேட்டை, திருப்​பத்​தூர், திருநெல்​வேலி, தென்​காசி ஆகிய 9 மாவட்​டங்​களில் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட ஊரக உள்​ளாட்​சிப் பிரதி​நி​தி​களின் பத​விக்​காலம் அக்.19-ம் தேதி​யுடன் முடிவடைந்​தது. இதையடுத்து, இந்த 9 மாவட்​டங்​களில் உள்ள ஊரக உள்​ளாட்சி அமைப்​பு​களை நிர்​வகிப்​ப​தற்​காக, 6 மாத காலத்​துக்கு (2027 ஏப்​ரல் 19 வரை) தனிஅலு​வலர்​களை நியமித்து தமிழக அரசு உத்​தர​விட்​டுள்​ளது. புதிதாக உரு​வாக்​கப்​பட்ட 9 ஊராட்சி ஒன்​றியங்​கள் மற்​றும் 93 கிராம ஊராட்​சிகள் இதில் அடங்​காது என்​றும் தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.

அந்​தந்த வட்​டாரங்​களின் மண்​டல துணை வட்​டார வளர்ச்சி அலு​வலர்​கள், அந்​தந்த கிராம ஊராட்​சிகளுக்​கான தனி அதி​காரி​களாக நியமிக்​கப்​படு​கிறார்​கள். மாவட்​டங்​களின் ஊராட்சி ஒன்​றியங்​களுக்கு ஊரக வளர்ச்சி மற்​றும் ஊராட்​சித் துறை​யின் உதவி இயக்​குநர் (ஊராட்​சிகள் மற்​றும் தணிக்கை) தனி அதி​காரி​களாக நியமிக்​கப்​படு​கிறார்​கள்.

அந்​தந்த மாவட்​டங்​களின் மாவட்ட ஊராட்​சிகளுக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை​களின் கூடுதல் இயக்​குநர் அல்​லது கூடுதல் ஆட்சி​யர் அல்​லது இணை இயக்​குநர் அல்​லது திட்ட இயக்​குநர் ஆகியோர் தனி அலு​வலர்​களாக நியமிக்​கப்​படுவ​தாக தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.

தேர்​தல் எப்​போது? - தனி அலு​வலர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், உள்​ளாட்​சித் தேர்​தலை உடனே நடத்த முடி​யாததற்​கான காரணத்​தையும் தமிழக அரசு தெரி​வித்​துள்​ளது. குறிப்​பாக 46 ஊரக உள்​ளாட்சி அமைப்​பு​களை, நகர்ப்​புற உள்​ளாட்சி அமைப்​பு​களு​டன் இணைத்து, நகர்ப்​புற உள்​ளாட்​சிகளை விரிவாக்​கம் செய்​தல், அத்​துடன், கிராம ஊராட்​சிகள், ஊராட்சி ஒன்​றியங்​கள் மற்​றும் மாவட்ட ஊராட்​சிகளின் எல்லைகளை மறு வரையறை செய்​தல் போன்ற பணிகள் நடை​பெற்று வரு​கின்​றன.

அத்​துடன், ஊரக வளர்ச்​சித்​துறை புதிதாக உரு​வாக்​கப்​பட்​டுள்ள 9 ஊராட்சி ஒன்​றியங்​கள், 93 ஊரக உள்​ளாட்​சிகள் தொடர்​பான இறுதி உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது. புதிய ஊரக உள்​ளாட்​சிகள் உரு​வாக்​கம் மற்​றும் எல்லை வரையறை, வகுப்​புவாரி பிரதி​நி​தித்​து​வம் உரு​வாக்​குதல் போன்ற பணிகள் 23 மாவட்​டங்​களில் நடை​பெற்று வரு​கின்​றன.

இது​த​விர, கடந்த 2024-ம் ஆண்டு தொடரப்​பட்ட வழக்​கிலும், வார்டு மறு வரையறை முடிக்​கப்​பட்டு பட்​டியலினத்​தவர், பழங்​குடி​யின பெண்​களுக்​கான ஒதுக்​கீடு போன்​றவை முடிக்​கப்​பட வேண்​டும் என்று கூறப்​பட்​டுள்​ளது. இப்​பணிகள் முடி​யாத வரையில் உள்​ளாட்​சித் தேர்​தல் நடத்த முடி​யாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போகிறது: 28 மாவட்டங்களிலும் தனி அலுவலர்கள் பதவிக்காலம் நீட்டிப்பு
நாதக தாராபுரம் வேட்பாளர் கார்த்திகா கைது: அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in