​தேர்தலையொட்டி தமிழகத்தில் தொடர்ந்து 3 நாட்கள் மதுக்கடைகள் மூடல்

​தேர்தலையொட்டி தமிழகத்தில் தொடர்ந்து 3 நாட்கள் மதுக்கடைகள் மூடல்
Updated on
1 min read

சென்னை: தேர்​தலை​யொட்டி தமிழகத்​தில் 4 நாட்​கள் மதுக்​கடைகள் மூடப்​படும் எனத் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

தமிழகத்​தில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் ஏப். 23-ம் தேதி நடை​பெற உள்ள நிலை​யில், சுதந்​திர​மான மற்​றும் அமை​தி​யான தேர்​தலை உறு​தி​செய்​யும் வகை​யில் தேர்​தல் ஆணை​யம் பல்​வேறு முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை மேற்​கொண்டு வரு​கிறது. அதன்ஒரு பகு​தி​யாக, தேர்​தலை முன்​னிட்டு மாநிலம் முழு​வதும் டாஸ்​மாக் மதுக்​கடைகளை மூட டாஸ்​மாக் நிர்​வாகத்​துக்கு தேர்​தல் ஆணை​யம் அறி​வுறுத்​தி​யுள்​ளது.

வாக்​குப்​ப​திவு நடை​பெறும் ஏப். 23-ம் தேதி அதற்கு முன்​பாக ஏப். 21, 22 ஆகிய தேதி​கள் என தொடர்ந்து 3 நாட்​களும், வாக்கு எண்​ணிக்கை நடை​பெறும் மே 4-ம் தேதி​யும் மதுக்​கடைகள் மூடப்​படும் என டாஸ்​மாக் தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து டாஸ்​மாக் அதி​காரி​கள் கூறுகை​யில், “வாக்​குப்​ப​திவு நாளான்​றும் வாக்கு எண்​ணிக்​கை​யின் போதும் பிரச்​சினை​கள் ஏற்​ப​டா​மல் அமை​தி​யான சூழல் இருக்க வேண்​டும் என்​ப​தால் கடைகள் மூடப்​படு​கின்​றன. வாக்​காளர்​களுக்கு மது கொடுத்து வாக்​கு​களைக் கவர்​வது போன்ற செயல்​கள் நடக்க வாய்ப்​புள்​ள​தால் தேர்​தல் ஆணை​யம் வாக்​குப்​ப​திவுக்கு 2 நாட்​களுக்​கும் முன் கடைகளை மூட உத்​தரவு பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளது” என்​றனர்​.

​தேர்தலையொட்டி தமிழகத்தில் தொடர்ந்து 3 நாட்கள் மதுக்கடைகள் மூடல்
ஸ்டாலின், இபிஎஸ், விஜய், சீமான் மனு ஏற்பு: வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் நாளை வெளியீடு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in