எஸ்ஐஆர்-ஐ சரிபார்க்க 12 லட்சம் பேருக்கு கடிதம்

எஸ்ஐஆர்-ஐ சரிபார்க்க 12 லட்சம் பேருக்கு கடிதம்
Updated on
1 min read

சென்னை: எஸ்​ஐஆர் படிவங்​களில் உள்ள விவரங்​களை சரி​பார்க்க 12.43 லட்​சம் வாக்​காளர்​களுக்கு அறி​விப்​புக் கடிதங்​கள் அனுப்​பப்​பட்​டுள்​ளன.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: தமிழகம் முழு​வதும் எஸ்ஐஆர் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இதன் ஒரு பகு​தி​யாக, கடந்த டிச.19-ம் தேதி வரைவு வாக்​காளர் பட்​டியல் வெளி​யிடப்​பட்​டது. வாக்​காளர் பட்​டியல் திருத்​தம், ஏற்​புரைகள், மறுப்​புரைகள் பெறு​வது ஆகிய பணி​கள் கடந்த டிச.19 தொடங்​கி, ஜன.18-ம் தேதி வரை நடை​பெறுகின்​றன.

தகு​தி​யான குடிமக்​கள் விண்​ணப்​பங்​களை சமர்ப்​பிக்க வசதி​யாக, கடந்த டிச.27, 28-ம் தேதி​களில் தமிழகம் முழு​வதும் உள்ள அனைத்து வாக்​குச்​சாவடி மையங்​களி​லும் சிறப்பு முகாம்​கள் நடத்​தப்​பட்​டன. இதில்,மொத்​தம் 7.18 லட்​சம் பேர் படிவம் வழங்​கி​யுள்​ளனர். அதி​கபட்​ச​மாக கோவை மாவட்​டத்​தில் 50,813 பேர், மதுரையில் 40,551 பேர், செங்​கல்​பட்டில் 38,124 பேர் படிவங்​களை சமர்ப்​பித்​துள்​ளனர்.

இதற்​கிடையே, அறி​விப்புக் காலம் மற்​றும் விசா​ரணை நடை​முறை​யும் கடந்த டிச.19-ம் தேதியே தொடங்​கியது. இது பிப்​.10-ம் தேதி வரை நடை​பெறும். இந்தக் காலத்​தில், ஏற்​கெனவே வழங்​கிய எஸ்​ஐஆர் படிவ விவரங்​களை உறு​திப்​படுத்த வேண்​டிய, திருத்​தம் மற்​றும் சரி​பார்ப்பு தேவைப்​படும் (2002, 2005 எஸ்​ஐஆர் தரவு​களை பூர்த்தி செய்​யாதவர்​கள்) அனைத்து வாக்​காளர்​களுக்​கும் அறி​விப்​புக் கடிதங்​கள் அனுப்​பப்​பட்​டுள்​ளன.

அதி​கபட்​ச​மாக சென்னை மாவட்​டத்​தில் 2.38 லட்​சம் பேர் உள்பட தமிழகம் முழு​வதும் 12.43 லட்​சம் வாக்​காளர்​களுக்கு கடிதங்​கள் அனுப்​பப்​பட்​டுள்​ளன. அதில் குறிப்​பிடப்​பட்​டுள்ள விசா​ரணை நாளில், உரிய ஆவணங்​களை சமர்ப்​பிக்க வேண்​டும். அதை ஆய்வு செய்து வாக்​காளர் பதிவு அலு​வலர்​கள் உரிய உத்​தரவை பிறப்​பிப்​பார்​கள். இறுதி வாக்​காளர் பட்​டியல் பிப்​.17-ம்​ தேதி வெளி​யிடப்​படும்​.

எஸ்ஐஆர்-ஐ சரிபார்க்க 12 லட்சம் பேருக்கு கடிதம்
கடும் பனிமூட்டம்: டெல்லிக்கு ரெட் அலர்ட்; 128 விமானங்கள் ரத்து!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in