நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை அவமதிக்கும் வகையில் புத்தகங்களை வெளியிட்டால் சட்டரீதியாக நடவடிக்கை பாயும்: அரசு

உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல்
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை அவமதிக்கும் வகையில் புத்தகங்களை வெளியிட்டால் சட்டரீதியாக நடவடிக்கை பாயும்: அரசு
Updated on
1 min read

சென்னை: திருப்​பரங்​குன்​றம் விவ​காரத்​தில் உயர் நீதி​மன்ற நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதனுக்கு எதி​ராக அவரை அவம​திக்​கும் வகை​யில் புத்​தகம் வெளி​யிட்​டால் சட்​டரீ​தி​யாக கடும் நடவடிக்கை எடுக்​கப்படும் என அரசு தரப்​பில் அறிக்கை தாக்​கல் செய்​யப்​பட்டுள்ளது.

திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் தீபம் ஏற்ற அனு​ம​தித்து உயர் நீதி​மன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன் உத்​தர​விட்​டார். இந்த விவ​காரத்​தில் நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதனை கடுமை​யாக விமர்​சித்து புத்​தகம் அச்​சிடப்​பட்​டு, அந்த புத்​தகங்​களை சென்னை​யில் நடை​பெற்ற புத்​தகக் காட்​சி​யில் வெளி​யிட​வுள்​ள​தாக​ சமூக வலை​தளங்​களில் விளம்​பரம் செய்​யப்​பட்​டது.

அதற்கு தடை கோரி வேலூரைச் சேர்ந்த நவீன் பிர​சாத் என்​பவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார். இந்த வழக்கை ஏற்​கெனவே விசா​ரித்த தலைமை நீதிபதி எம்​.எம்​.ஸ்ரீவஸ்​தவா மற்​றும் நீதிபதி ஜி.அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வு, நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதனுக்கு எதி​ராக புத்​தகங்களை அச்​சிட்ட கீழைக்​காற்று பதிப்​பகம் மீது தாமாக முன்வந்து விசா​ரணைக்கு எடுத்​தும், அச்​சிடப்​பட்ட புத்​தகங்​களை உடனடி​யாக பறி​முதல் செய்​யவும் உத்​தர​விட்​டது.

இந்​நிலை​யில், இந்த வழக்கு இதே அமர்​வில் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது மனு​தா​ரர் தரப்​பில் வழக்​கறிஞர் பி.ஜெகந்​நாத் ஆஜரா​னார். அரசு தரப்​பில் கூடு​தல் தலைமை வழக்​கறிஞர் ஜெ.ர​வீந்​திரன் மற்​றும் கூடு​தல் அரசு ப்ளீடர் ராஜ்​திலக் ஆகியோர் ஆஜராகி அறிக்கை தாக்​கல் செய்​தனர். அதில், ஜன.-ம் தேதி தொடங்​கிய புத்​தகக் காட்​சி​யில் உயர் நீதிமன்ற உத்​தர​வுப்​படி கீழைக் காற்று பதிப்​பக அரங்​கு​ உட்பட அனைத்து இடங்களிலும் சோதனை நடத்​தப்​பட்​டது. இதில் அந்தப் புத்​தகம் இல்​லை. எங்​கும் வெளியிடப்படவும் இல்லை.

இதுதொடர்​பாக புத்​தகக் காட்சி சங்க நிர்​வாகி​கள் சம்​பந்​தப்பட்ட பதிப்​பகத்​துக்கு நோட்​டீஸ் அனுப்பி விசா​ரணை நடத்​தினர். அப்​போது அந்த பதிப்​பகம் அந்த புத்​தகங்​களை வெளி​யிட​வோ, விற்​பனை செய்​யவோ மாட்​டோம் என உறு​தி​யளித்​துள்​ளது.

நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதனை அவம​திக்​கும் வகை​யில் சமூக வலை​தளங்​களில் வெளி​யிட்ட பதிவு​கள், கேலிச் சித்​திரங்களும் நீக்​கப்​பட்​டுள்ளன. இனிவரும் நாட்​களில் நீதிபதியை அவம​திக்​கும் வகையி​லான புத்​தகங்​களை புத்​தகக் காட்​சி​யிலோ மின்​னணு வடிவிலோ வெளி​யிட்​டால் சம்​பந்​தப்பட்​ட​வர்​கள் மீது சட்​டரீ​தி​யாக கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என தெரிவிக்​கப்​பட்டிருந்​தது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிப​தி​கள்​, வழக்​கு வி​சா​ரணை​யை பிப்​.4-க்​கு தள்​ளி வைத்​தனர்​.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை அவமதிக்கும் வகையில் புத்தகங்களை வெளியிட்டால் சட்டரீதியாக நடவடிக்கை பாயும்: அரசு
விளையாட்டு வீரர்களுக்கு ரூ.8 லட்சம் நிதியுதவி: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in