போதைப்பொருள் கடத்தல் நபருக்கும் எனக்கும் தொடர்பு இல்லை: லீமா ரோஸ் சகோதரர் ஜான் பிரிட்டோ காவல் ஆணையரகத்தில் புகார்

போதைப்பொருள் கடத்தல் நபருக்கும் எனக்கும் தொடர்பு இல்லை: லீமா ரோஸ் சகோதரர் ஜான் பிரிட்டோ காவல் ஆணையரகத்தில் புகார்
Updated on
1 min read

சென்னை: போதைப்​பொருள் கடத்​தல் நபருக்​கும், எனக்​கும் தொடர்பு இல்​லை. சமூக வலை​தளங்​களில் வீடியோ பதி​விட்​ட​வர்​கள், பரப்​பிய​வர்​கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று அதி​முக எம்​எல்ஏ லீமா ரோஸ் மார்ட்​டின் சகோ​தரர் ஜான் பிரிட்டோ சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் புகார் அளித்​தார்.

இலங்​கைக்கு கடல் வழி​யாக ரூ.250 கோடி மதிப்​பிலான போதைப்​பொருட்​களை கடத்​தி​ய​தாக கூறப்​படும் வழக்​கில், கோவையை சேர்ந்த ஜான் பிரிட்டோ (57) என்​பவரை அமலாக்​கத்​துறை அண்​மை​யில் கைது செய்​தது.

இந்த ஜான்​பிரிட்​டோ, அதி​முக எம்​எல்ஏ லீமா ரோஸ் சகோ​தரர் எனவும், இவர்​களது குடும்​பத்தை சேர்ந்​தவர் தான் அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா என்​றும் சமூக வலை​தளங்​களில் தகவல் வைரலானது.

இந்​நிலை​யில், தனக்​கும் போதைப் பொருள் கடத்​தல் வழக்​குக்​கும், எந்த சம்​பந்​த​மும் இல்​லாத நிலை​யில், தன் பெயரை போதைப்​பொருள் கடத்​தல் கும்​பலுடன் தொடர்​புபடுத்தி சமூக வலை​தளங்​களில் அவதூறு கருத்​துக்​களை பதி​விட்டு வருபவர்​கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று லீமா ரோஸ் சகோ​தர​ரான கோயம்​புத்​தூர், திரு​வள்​ளுவர் நகரை சேர்ந்த ஜான் பிரிட்டோ (59) என்​பவர் சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் நேற்று புகார் மனு அளித்​தார்.

அதில், அவர் கூறி​யிருந்​த​தாவது: நான் கோவை​யில் பிளாஸ்​டிக் மறு சுழற்சி வியா​பாரம் செய்​கிறேன். தற்​போது சென்னை திரு​வல்​லிக்​கேணி​யில் உள்ள எங்​கள் அலு​வல​கத்​தில் வேலை செய்து வரு​கிறேன்.

எனது சகோ​தரி லீமா ரோஸ் மற்​றும் அவரது குடும்​பத்​தினர் மீது வேண்​டுமென்று உள்​நோக்​கத்​தோடு உண்​மைக்கு புறம்​பாக பல்​வேறு அவதூ றான குற்​றச்​சாட்​டுக்​கள் திட்​ட​மிட்​டு, சுய ஆதா​யம் அடைவதற்​காக யூடியூபில் தொடர்ந்து பரப்​பப்​பட்டு வரு​கிறது. யூடியூபில் பதிவேற்​றம் செய்​யப்​பட்ட வீடியோவை நான் கடந்த 8-ம் தேதி பார்த்​தேன்.

அந்த வீடியோ​வில் கூறப்​படும் ஜான் பிரிட்டோ எனும் போதைப்​பொருள் கடத்​தலில் ஈடு​பட்ட நபருக்​கும், எனக்​கும் எந்த ஒரு தொடர்​பும் கிடை​யாது. என்​னிடம் மத்​திய மாநில அரசுகளை சார்ந்த எந்த ஒரு புல​னாய்வு நிறு​வன​மும், எந்த காலத்​தி​லும் போதைப்​பொருள் கடத்​தல் தொடர்​பாக, எந்த ஒரு விசா​ரணை​யும் செய்​தது கிடை​யாது.

நான் அவ்​வாறான குற்றச் செயல்​களில் எந்த ஒரு சூழ்​நிலை​யிலும் ஈடு​பட்​டதும் கிடை​யாது. இவ்​வாறு இருக்​கை​யில் உண்​மைக்கு மாறாக பொய்​யாக​வும், உள்​நோக்​கத்​தோடும் வீடியோ​வில் என் மீது புகார் கூறப்​பட்​டுள்​ளன.

இதனால், எனக்​கும் மற்​றும் என் குடும்​பத்​தார் நற்​பெயருக்​கும் மிகப்​பெரிய களங்​கம் ஏற்​பட்​டுள்​ளது. இதற்கு காரண​மானவர்​கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்​க வேண்​டும்​. இவ்​வாறு தெரி​வித்​துள்​ளார்​.

போதைப்பொருள் கடத்தல் நபருக்கும் எனக்கும் தொடர்பு இல்லை: லீமா ரோஸ் சகோதரர் ஜான் பிரிட்டோ காவல் ஆணையரகத்தில் புகார்
பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட தவெகவினர் மீது நடவடிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in