ராணிப்பேட்டையில் ரூ.271 கோடியில் விரைவில் தோல் பொருட்கள் உற்பத்திக்கான முனையம்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் ராணிபேட்​டை பனப்​பாக்​கத்​தில் ரூ.271 கோடி முதலீட்​டில் தோல் மற்​றும் தோல் சார்ந்த துணைப்​பொருட்​களுக்​கான தொழிற்​பேட்டை அமைக்​கப்பட உள்​ள​தாக, மத்​திய வர்த்​தகம், தொழில்​ துறை அமைச்சக இணைச் செயலர் (நிதி) கேசர்​வானி தெரி​வித்​தார்.

மத்​திய தொழில் மற்​றும் வர்த்தக அமைச்​சகம் மற்​றும் தோல் ஏற்​றுமதி கவுன்​சில் சார்​பில், தோல் மற்​றும் தோல் அல்​லாத துறை சார்ந்த விழிப்​புணர்வு மற்​றும் தொழில் புரிவதை எளி​தாக்​கு​வதற்​கான சீர்​திருத்​தங்​கள் குறித்த நிகழ்ச்சி சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் மத்​திய வர்த்​தகம் மற்​றும் தொழில்​துறை அமைச்சக இணைச் செயலர் (நிதி) கேசர்​வானி கூறிய​தாவது: நாட்​டில் தோல் மற்​றும் காலணித் துறை​யில் தமிழகம் முன்​னிலை​யில் உள்​ளது.

தமிழகத்​தில் ராணிப்​பேட்​டை, பிஹார், மத்​தி​யப் பிரதேசம், மகா​ராஷ்டிரா ஆகிய இடங்​களில் ரூ.891 கோடி முதலீட்​டில் தோல் மற்​றும் தோல் சார்ந்த துணைப் பொருட்​களுக்​கான தொழிற்​பேட்டை (கிளஸ்​டர்​ஸ்) அமைக்​கப்பட உள்​ளன. இவற்​றில், தமிழகத்​தில் ராணிபேட்​டை​யில் பனப்​பாக்​கத்​தில் ரூ.271 கோடி முதலீட்​டில் தோல் மற்​றும் அது சார்ந்த துணைப்​ பொருட்​களுக்​கான தொழிற்​பேட்டை அமைக்​கப்பட உள்​ளது.

தோல் மற்​றும் தோல் அல்​லாத பொருட்​கள் உற்​பத்​தி, தோல் உற்​பத்​தி​யில் உள்​நாடு தேவை மற்​றும் வெளி​நாடு ஏற்​றுமதி ஆகிய​வற்றை கவனத்​தில் கொண்டு இத்​திட்​டம் செயல்​படுத்​தப்பட உள்​ளது. இது​வரை ரூ.2 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்த்து உள்​ளோம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
தவெக வலைவீச்சில் அல்லாடும் அதிமுக - என்ன செய்யப் போகிறார் பழனிசாமி?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in