தமிழக - கர்நாடக முதல்வர்கள் பேச்சுவார்த்தை உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது: பி.ஆர்.பாண்டியன், அன்புமணி எதிர்ப்பு

மேகேதாட்டு

மேகேதாட்டு

Updated on
2 min read

நாகப்பட்டினம்: ​கா​விரி நீர், மேகே​தாட்டு அணை தொடர்​பாக பேச்​சு​வார்த்தை நடத்த முதல்​வர் விஜய்​யை, கர்​நாடக முதல்​வர் டி.கே.சிவகு​மார் அழைப்பு விடுத்ததற்கு தமிழக காவிரி விவ​சா​யிகள் சங்​கப் பொதுச் செய​லா​ளர் பி.ஆர்​.​பாண்​டியன், பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளார்.

நாகை மாவட்​டம் வேதா​ரண்​யத்​தில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறியது: 2013-ல் தமிழகத்​துக்கு கர்​நாடகா தண்​ணீர் திறக்க மறுத்​ததற்கு எதி​ராக உச்ச நீதி​மன்​றத்​தில் அன்​றைய முதல்​வர் ஜெயலலிதா வழக்​குத் தொடர்ந்​தார். இதையடுத்​து, உச்ச நீதி​மன்ற உத்​தர​வின்​படி, கர்​நாடக முதல்​வருடன் பேச்​சு​வார்த்தை நடத்த முதல்​வ​ராக இருந்த ஜெயலலிதா சென்​றார். அப்​போது, தமிழகத்​தில் நில​வும் வறட்​சியை சுட்​டி​க்காட்​டி, கர்​நாடகம் தண்​ணீர் தர வேண்​டும் என ஜெயலலிதா வலி​யுறுத்​தி​னார். ஆனால், தண்​ணீர் திறக்க இயலாது என அப்​போது கர்​நாடகமுதல்​வ​ராக இருந்த ஜெ கதீஷ் ஷெட்​டர் மறுத்​து​வி்ட்​டார்.

அதன்​பின், இந்த பேச்​சு​வார்த்தை குறித்து உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு அறிக்கை சமர்ப்​பித்​தது. அதை ஏற்​றுக் கொண்ட உச்ச நீதி​மன்​றம், இனி காவிரி குறித்து எந்த ஒருபேச்​சு​வார்த்​தை​யிலும் கர்​நாடகம், தமிழகம் தனிப்​பட்ட முறை​யில் ஈடு​படக் கூடாது எனவும், தமிழகத்​துக்கு தேவை​யான தண்​ணீரை விடுவிக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்​டும் எனவும் உத்​தர​விட்​டது. அதன்​பின், பிரதமர் உத்​தர​வின் பேரில் கர்​நாட​கா​வில் இருந்து தமிழகத்​துக்கு தண்​ணீர் திறக்​கப்​பட்​டது.

இந்த நிலை​யில், காவிரி நீர் மற்​றும் மேகே​தாட்டு அணை விவ​காரம் தொடர்​பாக ஆக.3-ம் தேதி பேச்​சு​வார்த்தை நடத்த வரு​மாறு தமிழக முதல்​வர் விஜய்க்கு கர்​நாடக முதல்​வர் டி.கே.சிவகு​மார் அழைப்பு விடுத்​துள்​ளார். இது மேகே​தாட்டு அணை கட்ட எடுக்​கும் முயற்​சியை நியாயப்​படுத்​தும் வித​மாக எடுக்​கப்​படும் நயவஞ்சக நடவடிக்​கை​யாகும்.

மேலும், பேச்​சு​வார்த்தை நடத்த தமிழக முதல்​வருக்கு கர்​நாடக முதல்​வர் அழைப்பு விடுத்​திருப்​பது உச்ச நீதி​மன்ற உத்​தர​வுக்கு முரணானது ஆகும். எனவே, கர்​நாடக முதல்​வர் டி.கே.சிவகு​மாரின் அழைப்பை தமிழக முதல்​வர் விஜய் நிராகரிக்க வேண்​டும். காவிரி மேலாண்மை ஆணை​யம் மட்​டுமே காவிரி நீர் தொடர்​பாக முடி​வெடுக்க முடி​யும். ஆணை​யத்​தின் அனு​மதி இல்​லாமல் எந்த ஒரு மாநில​மும் காவிரி நீரை பகிர்ந்​தளிக்​க​வும், அணை கட்​டு​மானம் குறித்து பேச்​சு​வார்த்தை நடத்​த​வும் இயலாது என்​ப​தை உணர வேண்​டும்​. இவ்​வாறு ​கூறி​னார்​.

இதே​போல் பாமக தலை​வர் அன்​புமணி நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: மேகே​தாட்டு சிக்​கல் குறித்து கர்​நா​டகா​விடம் பேச்சு நடத்த தமிழக அரசு ஒப்​புக்​கொண்​டிருப்​பது அதிர்ச்​சி​யளிக்​கிறது; இது கடுமை​யாக கண்​டிக்​கத்​தக்​கது. மேகே​தாட்டு விவ​காரம் குறித்து கர்​நாடக அரசுடன் முதல்​வர் விஜய் பேச்சு நடத்​து​வது மோச​மான பின்​னடைவை ஏற்​படுத்தி விடும்.

மேகே​தாட்டு போன்ற சர்ச்​சைக்​குரிய விவ​காரங்​களில் தமிழக அரசு தன்​னிச்​சை​யாக எந்த முடிவை​யும் எடுக்​கக்​கூ​டாது. கர்​நாடகா செல்​லும் முடிவை முதல்​வர் விஜய் கைவிட வேண்​டும். சட்​டப்​போ​ராட்​டங்​களின் மூலம் மேகே​தாட்டு அணை கட்​டு​வதற்​கான சதித் திட்​டத்தை தடுத்து நிறுத்​து​வதற்கு முன்வர வேண்​டும். இவ்​வாறு அந்த அறிக்கையில் தெரி​வித்​துள்​ளார்​.

<div class="paragraphs"><p>மேகேதாட்டு </p></div>
“போராட்டம் குறித்த என் கருத்தை ஊடகங்கள் தவறாக சித்தரித்துவிட்டன” - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in