உழைப்பின் பெருமையை உலகுக்கு பறைசாற்றும் ‘மே தினம்’ - அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

உழைப்பின் பெருமையை உலகுக்கு பறைசாற்றும் ‘மே தினம்’ - அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து
Updated on
2 min read

சென்னை: உல​கம் முழு​வதும் தொழிலா​ளர் தினம் இன்று (மே 1) கொண்​டாடப்​படு​கிறது. இதையொட்டி தொழிலா​ளர்​களுக்கு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர்.

இதுதொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட வாழ்த்து செய்​தி​களில் கூறி​யிருப்​ப​தாவது:

முதல்​வர் மு.க.ஸ்​டா​லின்: உழைப்​பை​யும், உழைப்​போரை​யும் கொண்​டாடும் இந்த மே நாளில், திமுக தொழிலா​ளர்​களின் உண்​மைத் தோழ​னாக என்​றென்​றும் திகழ்ந்​திடும் என்ற உறு​தி​யை​யும், உழைக்​கும் தோழர்​களுக்​கும் அவர்​தம் குடும்​பத்​தினர் அனை​வருக்​கும் உளமார்ந்த வாழ்த்​துகளை​யும் தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி: உழைப்​பு​தான் நம்மை உயர்த்​தும். உழைப்​பின் பயனால் கிடைக்​கும் உயர்வே மனநிறைவு அளிக்​கும். அந்த வகை​யில், உழைக்​கும் கரங்​களின் ஒற்​றுமையை உணர்த்​தி, உழைப்​பின் பெரு​மையை உலகுக்​குப் பறை​சாற்​றும் மே தினத்​தில், தொழிலா​ளர்​கள் அனை​வருக்​கும் உளங்​க​னிந்த மே தின நல்​வாழ்த்​துகள்.

தமிழக காங்​கிரஸ் தலை​வர் கு.செல்​வப்​பெருந்​தகை: நாட்​டின் ஒவ்​வொரு முன்​னேற்​றத்​துக்​கும் அடிப்​படை காரணம் தொழிலா​ளர்​களின் அர்ப்​பணிப்​பு. அவர்​களின் உரிமை​கள் காக்​கப்பட வேண்​டும். உழைப்​போரை உயர்த்தி சமத்​து​வத்தை நிலை நிறுத்​து​வோம்.

மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ: இது​வரை இல்​லாத அளவுக்கு தொழிலா​ளர் வர்க்​கத்​தின் மீது மோச​மான தாக்​குதலை பிரதமர் மோடி​யின் அரசு தொடுத்து வரு​கிறது. உழைக்​கும் தோழர்​களின் உரிமை​களுக்​காக தொடர்ந்து போராடு​வோம் என உறு​தி​யேற்​போம்.

தி.க தலை​வர் கி.வீரமணி: பன்​னாட்டு முதலா​ளி​களாலும், பிறவி முதலா​ளி​களாலும் சுரண்​டப்​படு​வதை எதிர்த்து போராடி, தொழிலா​ளர்​களின் வாழ்​வில் விடியலைக் கொண்​டு​வந்த நாள் இன்​று.

மார்க்​சிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம்: உழைப்​பவருக்கே உலகம் உரியது. 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்​வு, 8 மணி நேர உறக்​கம் என்​பதை உயிர் நீத்து போராடி பெற்​றுக்​கொடுத்த தியாகி​களுக்கு வீர வணக்​கத்தை தெரி​வித்​துக் கொள்​கிறோம்.

இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன்: தொழிலா​ளர்​களின் ஒற்​றுமை​யாலும் ஒன்​று​பட்ட போராட்​டங்​களி​னாலும் மட்​டுமே, அவர்​களுக்​கான உரிமை​களை உறு​திப்​படுத்த இயலும். அத்​தகைய ஒற்​றுமை​யை​யும், ஒரு​மைப்​பாட்​டை​யும் உறு​தி​யாகக் கட்​டியமைக்க, இந்த மே தினத்​தில் உறுதி ஏற்​போம்.

பாமக தலை​வர் அன்​புமணி: நியாய​மான ஊதி​யம், விடு​முறை, 8 மணி நேர பணி, ஓய்​வூ​தி​யம் உள்​ளிட்ட சமூகப் பாது​காப்​பு​கள் என அனைத்​தை​யும் வென்​றெடுத்​துக் கொடுப்​ப​தன் மூலம், பாட்​டாளி​களுக்கு ஒளிமய​மான எதிர்​காலம் அமைத்து கொடுக்க இந்​நாளில் உறு​தி​யேற்​போம்.

தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன்: மக்​களின் தேவை​களுக்​கும், முதலா​ளி​களின் லாபத்​துக்​கும், தொழில்​களின் மேம்​பாட்​டுக்​கும், நாட்​டின் முன்​னேற்​றத்​துக்​கும் உழைத்து களைக்​கும் தொழிலா​ளர்​கள் வாழ்​வில் முன்​னேறி, மகிழ்​வுடன் வாழ துணை நிற்​போம்.

அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன்: உழைக்​கும் மக்​கள், தங்​களின் உரிமை​களுக்​காக போராடி அவற்றை மீட்​டெடுத்த மே தினத்​தில், நாம் கண்​டிருக்​கும் வளர்ச்​சிக்​கும், முன்​னேற்​றத்​துக்​கும், முது​கெலும்​பான உழைப்​பாளர்​களின் உழைப்​பை​யும், தியாகத்​தை​யும் போற்றி நினை​வு​கூர்​வோம். இவ்​வாறு அவர்​கள் கூறி​யுள்​ளனர்.

மேலும், தவாக தலை​வர் தி.வேல்​முரு​கன், ஐஜேகே தலை​வர் ரவிபச்​ச​முத்​து, முன்​னாள் எம்​.பி சு.​திரு​நாவுக்​கரசர், கொமதேக பொதுச் செய​லா​ளர் ஈ.ஆர்​.ஈஸ்​வரன், பெருந்​தலை​வர் மக்​கள் கட்சி தலை​வர் என்​.ஆர்​.தன​பாலன், உள்​ளிட்​ட அரசியல் கட்சித் தலைவர்கள் மே தின வாழ்த்​து தெரிவித்​துள்​ளனர்​.

உழைப்பின் பெருமையை உலகுக்கு பறைசாற்றும் ‘மே தினம்’ - அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து
ஷுப்மன் கில் அதிரடியில் ஆர்சிபி அணியை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in