நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

பிரக்ஞானந்தா

பிரக்ஞானந்தா

Updated on
1 min read

சென்னை: ​நார்வே செஸ் தொடரில் சாம்​பியன் பட்​டம் வென்ற கிராண்ட் மாஸ்​டர் பிரக்​ஞானந்​தாவுக்கு முதல்​வர் விஜய் மற்​றும் பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர்.

இதுதொடர்​பாக, அவர்​கள் வெளி​யிட்ட வாழ்த்து செய்​தி​களில் கூறி​யிருப்​ப​தாவது:

முதல்​வர் விஜய்: நார்வே நாட்​டின் தலைநகர் ஆஸ்​லோ​வில் நடை​பெற்ற நார்வே செஸ் - 2026 தொடரில் அறி​வார்ந்த ஆட்​டத்தை வெளிப்​படுத்​தி, பட்​டத்தை வென்ற முதல் இந்​தி​யர் என்ற வரலாற்று சாதனையை படைத்​திருக்​கும் கிராண்ட் மாஸ்​டர் பிரக்​ஞானந்​தாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்​துகள். ஒரே தொடரில் நடப்பு சாம்​பியன் மாக்​னஸ் கார்ல்​செனை 2 முறை​யும், 4 போட்​டிகளில் தொடர்ந்து வெற்​றி​யும் பெற்று சாதனை படைத்​துள்​ளார்.

தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை: நார்வே செஸ் சாம்​பியன்​ஷிப் விளை​யாட்​டில் கிராண்ட்​மாஸ்​டர் பிரக்​ஞானந்தா பெற்ற வெற்​றி, கோடிக்​கணக்​கான இந்​திய இளைஞர்​களுக்கு மிகப்​பெரிய உத்​வேகமளிக்​கும். உலக அரங்​கில் இந்​தி​யா​வின் புகழை கொடிகட்டி பறக்க செய்​துள்ள பிரக்​ஞானந்​தாவுக்கு பாராட்​டுக்​கள்.

அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன்: நார்வே நாட்​டில் நடை​பெற்ற செஸ் தொடரில் சாம்​பியன் பட்​டம் வென்று வரலாற்று சாதனை படைத்​திருக்​கும் இந்​தி​யா​வின் கிராண்ட்​மாஸ்​டர் பிரக்​ஞானந்​தாவுக்கு பாராட்​டுக்​களை தெரி​வித்​துக்​கொள்​கிறேன். பிரக்​ஞானந்​தா​வின் வெற்​றிப் பயணம் தொடர்ந்து செஸ் விளை​யாட்​டு உலகில்​ உச்​சம்​ தொட வாழ்​த்​துகிறேன்​.

<div class="paragraphs"><p>பிரக்ஞானந்தா</p></div>
தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி இல்லை: மதுரையில் அமைச்சர் நிர்மல்குமார் சூசகம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in