தேர்வு மைய ஒதுக்கீட்டு குளறுபடியால் டிஎன்பிஎஸ்சி தேர்வு ரத்து: தலைவர்கள் கண்டனம்

நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
தேர்வு மைய ஒதுக்கீட்டு குளறுபடியால் டிஎன்பிஎஸ்சி தேர்வு ரத்து: தலைவர்கள் கண்டனம்
Updated on
1 min read

சென்னை: தேர்வு மைய ஒதுக்​கீட்​டில் நிகழ்ந்த குளறு​படி காரண​மாக தமிழகத்​தில் நேற்று நடக்க இருந்த டிஎன்​பிஎஸ்சி குரூப்​-2, 2 மெயின் தேர்​வு​கள் ரத்து செய்​யப்​பட்​டன. இதற்கு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்​. இதுகுறித்து அவர்​கள் கூறி​யுள்​ள​தாவது:

மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன்: அரசுப் பணிக்​கான தேர்​வைக்​ கூட நடத்த முடி​யாத லட்​சணத்​தில்​தான் டிஎன்​பிஎஸ்சி நிர்​வாக​மும், திரா​விட மாடல் திமுக அரசும் உள்​ளது. திமுக அரசின் நிலையை இந்த செயல் வெளிச்​சம் போட்​டுக் காட்​டு​கிறது. தேர்​வர்​களை அலைக்​கழித்​து, தவிக்​க​வைத்த டிஎன்​பிஎஸ்சி நிர்​வாகத்தை கண்​டிக்​கிறேன்.

அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி: குரூப்-2 போன்ற முக்​கி​யத்​து​வம் வாய்ந்த ஒரு தேர்​வு, தேர்வுநாளன்று தள்ளிவைக்​கப்​படு​வது தமிழக வரலாற்​றிலேயே இதுவே முதல் முறை. தேர்வு குளறு​படிகளை அதி​காரி​கள் மீது சுமத்​தி, அவர்​கள் மீது மட்​டும் கண்​துடைப்பு நடவடிக்கை எடுக்​காமல், இத்​தகைய தவறுகள் எதிர்​காலத்​தில் நடக்காமல் இருக்க முறை​யான நடவடிக்​கைகளை உடனடி​யாக எடுக்​கு​மாறு ஆளும் திமுக அரசை வலி​யுறுத்​துகிறேன்.

பாமக தலை​வர் அன்​புமணி: மிகச் சாதா​ரண​மான ஒரு போட்​டித் தேர்​வைக்​கூட குளறு​படி இல்​லாமல் நடத்​து​வதற்கு முடி​யாத நிலை​யில்​தான் திமுக அரசுஉள்​ளது.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: அரசுத் தேர்​வு​களில் இது​போன்ற குழப்​பம் எதேச்​சை​யாக நடந்​ததா அல்​லது தேர்வை ரத்து செய்ய வேண்​டும் என்ற திட்​ட​மிட்ட சதியா என்​பதை பொது​ மக்​களிடம் விளக்க வேண்​டியது தமிழக முதல்​வரின் தார்​மீகப் பொறுப்​பு.

மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்முகம்: தேர்வை நடத்​து​வ​தில் பொறுப்​பற்ற முறை​யில் நடந்து கொண்ட அதி​காரி​கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

இதேபோல் இந்த விவகாரத்துக்காக தமிழக பாஜக முன்​னாள் தலை​வர்​கள் தமிழிசை, அண்​ணா​மலை, தவெக தேர்​தல் பிரச்​சார மேலாண்மை பொதுச் செய​லா​ளர் ஆதவ் அர்​ஜுனா உள்​ளிட்​டோரும் டிஎன்​பிஎஸ்​சிக்​கு கண்​டனம்​ தெரி​வித்​துள்​ளனர்​.

தேர்வு மைய ஒதுக்கீட்டு குளறுபடியால் டிஎன்பிஎஸ்சி தேர்வு ரத்து: தலைவர்கள் கண்டனம்
“எந்த முறைகேட்டை மறைக்க டிஎன்பிஎஸ்சி தேர்வு ரத்தானதோ!”- விஜய்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in