“பண்டிகை நாளில் பட்டாசு சத்தத்தை விட பட்டாக் கத்திகளின் சத்தமே அதிகம்” - தலைவர்கள் கண்டனம்

“பண்டிகை நாளில் பட்டாசு சத்தத்தை விட பட்டாக் கத்திகளின் சத்தமே அதிகம்” - தலைவர்கள் கண்டனம்
Updated on: 
2 min read

சென்னை: தமிழகத்​தில் தீபாவளிப் பண்​டிகையன்று நடை​பெற்ற தொடர் கொலைச் சம்​பவங்​களுக்​கும், சீர்​குலைந்​துள்ள சட்​டம்-ஒழுங்கு நிலை​மைக்​கும் பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​களும் தங்​களது கடுமையான கண்​டனங்​களைப் பதிவு செய்​துள்​ளனர்.

எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி: தவெக ஆட்​சி​யில் ஒரே நாளில் காவலர் உள்​பட 9 பேர் படுகொலை செய்​யப்​பட்​டுள்​ளனர். பண்​டிகை நாளில் பட்​டாசு சத்​தத்தை விட பட்​டாக்​கத்​தி​களின் சத்​தமே அதி​கம் கேட்​கும் அளவுக்கு ஆட்சி நடக்​கிறது. முதல்​வர் ‘ஆய்வு செய்​கிறேன்’ என்று சிறைக்​குச் சென்​றால் கைதி​கள் தப்​பிக்​கிறார்​கள்; காவல் நிலை​யங்​களுக்​குச் சென்​றால் காவலர்​களே கொலை​யாகிறார்​கள்.

இந்த ஆட்​சி​யில் பொது​மக்​களுக்​கும் பாது​காப்​பில்லை, அவர்​களைக் காக்க வேண்​டிய காவலர்​களுக்​கும் பாது​காப்​பில்லை. கோரிக்​கையோடு சென்​றவரை துணை சபாநாயகரே அடித்து விரட்​டுவதும், பின்​னர் அவரை மிரட்டி வீடியோ வெளி​யிட வைப்​ப​தும் தமிழகம் இது​வரை கண்​டிடாத கேவலமாகும். ‘திமுக... திமுக...’ என்​று இன்​னும் எத்​தனை நாட்​களுக்கு மக்​களை ஏமாற்​று​வார் முதல்​வர்?

அதிமுக பொதுச்​செய​லா​ளர் பழனிசாமி: வீதி​யில் நின்​றால் கொலை, தட்​டிக்​கேட்​டால் படுகொலை என்​னும் அளவுக்கு ரவுடிகளும் குற்​றவாளி​களும் அச்​சமின்றி நகர்​வலம் வரும் அளவுக்கு மாநிலத்​தின் சட்​டம்-ஒழுங்​கைத் தள்​ளி​யிருக்​கிறது தவெக அரசு. காக்​கிச் சட்​டைக்கே இங்கு பாது​காப்​பில்லை​யென்​றால், சாமானிய மக்​களுக்கு எங்கே பாது​காப்பு இருக்​கும்?

திமுக துணைப் பொதுச் செய​லா​ளர் கனி​மொழி: தேனியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், திருவள்ளூரில் இளம்பெண், சமயபுரத்தில் இரு சிறார்கள், திருச்சியில் ஐடி ஊழியர் என பல மாவட்டங்களில் உயிர்கள் பறிபோய் உள்ளன. ஒருபுறம் மக்​கள் தீபாவளிப் பண்​டிகையைக் கொண்​டாடிக் கொண்​டிருக்க, இந்த மனிதாபிமானமற்ற ஆட்​சி​யில் மறு​புறம் உயிர்​களை இழந்த குடும்​பங்​களில் மரண ஓலம் கேட்​கிறது. இன்​னும் எத்​தனை உயிர்​கள் பறிபோனாலும் முதல்​வர் வாய் திறக்​கப்​போவதில்லை. மக்​கள் எல்​லா​வற்​றையும் எப்​போதும் சகித்​துக்​கொண்டே இருப்​பார்​கள் என்று நினைத்​து​விடாதீர்​கள்.

பாமக தலை​வர் அன்​புமணி: தீபாவளி நாளில் நடை​பெற்ற பெரும்​பாலான குற்​றச் சம்​பவங்​களுக்கு மதுவே முக்​கியக் காரணம். திரு​விழாக் காலங்​களில் ஒரு வாரத்​துக்கு மதுக்​கடைகளை மூட வேண்​டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வரு​கிறது. ஆனால், தமிழக அரசு அதைக் கண்​டுகொள்​ளாததன் விளைவே இந்​தப் படுகொலைகள் ஆகும்.

அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன்: தலைநகர் சென்​னை​யில் தொடங்கி கடைக்​கோடி மாவட்​டங்​கள் வரை படுகொலைச் சம்​பவங்​கள் சர்​வசாதா​ரண​மாக நடை​பெறும் அளவுக்​குச் சீர்​குலைந்​திருக்​கும் சட்​டம்- ஒழுங்​கைச் சீரமைக்க எந்​த​வித நட​வடிக்​கையும் எடுக்​காமல், கேளிக்​கைகளுக்கு முக்​கியத்​து​வம் கொடுக்​கும் முதலமைச்​சரை​யும், தீபாவளி சிறப்​புத் தொலைக்​காட்சி நிகழ்​வு​களில் விருந்​தினர்​களாகப் பங்​கேற்று கொண்​டாடி மகிழும் அமைச்​சர்​களை​யும் பெற்​றிருப்​பது தமிழக மக்​களின் சாபக்​கேடாகும்.

தேமுதிக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா: ஒரு மனித உயிருக்கு ரூ.40 லட்​சம்​தான் மதிப்பா, உயி​ரிழந்​தவரின் குடும்​பத்​துக்கு இழப்​பீடு வழங்​கு​வது மட்​டுமே அரசின் கடமையல்ல; இதுபோன்ற உயி​ரிழப்​பு​கள் மீண்​டும் நிகழாமல் தடுப்​பதே உண்​மையான பொறுப்​பாகும். சிறைகளில் இருந்து கைதி​கள் தப்​பிச் செல்​வதும், காவல்​துறை​யினரே வன்​முறைக்​குப் பலியாவதும் தமிழகத்​தின் சட்​டம்-ஒழுங்கு நிலை குறித்​துக் கடுமையான கேள்​வி​களை எழுப்​பு​கின்​றன.

இதேபோன்று இந்​திய ஜனநாயகக் கட்​சித் தலை​வர் ரவி பச்​சமுத்து, எஸ்டி​பிஐ கட்​சி​யின் மாநிலப் பொருளாளர் முஸ்தபா உள்​ளிட்ட பல்​வேறு தலை​வர்​களும் இச்​சம்​பவங்​களுக்​குக் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்.

“பண்டிகை நாளில் பட்டாசு சத்தத்தை விட பட்டாக் கத்திகளின் சத்தமே அதிகம்” - தலைவர்கள் கண்டனம்
“அமெரிக்க இடைத்தேர்தல் நேர்மையாக நடந்ததா?” - வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து ட்ரம்ப் சந்தேகம்

X