“அமெரிக்க இடைத்தேர்தல் நேர்மையாக நடந்ததா?” - வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து ட்ரம்ப் சந்தேகம்

“அமெரிக்க இடைத்தேர்தல் நேர்மையாக நடந்ததா?” - வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து ட்ரம்ப் சந்தேகம்
Updated on: 
1 min read

வாஷிங்டன்: அமெரிக்க இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி பின்னடைவைச் சந்தித்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையைக் கைப்பற்றியுள்ள நிலையில், தேர்தலின் நேர்மை குறித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், தொடக்கக்கால வாக்குப்பதிவில் வழக்கத்திற்கு மாறாக ஒரே நேரத்தில் பதிவான அதிகப்படியான வாக்குத் தொகுப்புகளே குடியரசுக் கட்சியின் வெற்றி வாய்ப்பைப் பறித்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து ட்ரூத் சோஷியல் பதிவில் ட்ரம்ப் கூறியுள்ளதாவது, “இந்தத் தேர்தல் நேர்மையாக நடைபெற்றது என்று யாராவது உண்மையிலேயே நம்புகிறார்களா? தேர்தல் கருத்துக்கணிப்புகள் எப்படி இவ்வளவு தவறாகப் போக முடியும்? சில தொடக்கக்கால வாக்குப்பதிவுத் தொகுப்புகள் மிகவும் பிரம்மாண்டமாக இருந்ததால், எத்தனை பேர் வாக்களிக்க வந்தாலும் வெற்றி பெறுவது சாத்தியமில்லாமல் போய்விட்டது. அனைத்தும் வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பொறுத்தே உள்ளது. அவை வாக்காளர்களை விட மிக முக்கியமானவையாக மாறிவிட்டன” என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே, தேர்தல் தோல்விக்குப் பிறகு அளித்த நேர்காணலில் பேசிய அதிபர் ட்ரம்ப், தமது நிர்வாகத்தின் தீவிரமான சட்டவிரோதக் குடியேற்றக் கொள்கை குடியரசுக் கட்சியின் தோல்விக்கு ஒரு முக்கியக் காரணமாக அமைந்திருக்கலாம் என்பதை ஒப்புக்கொண்டார்.

தமது நிர்வாகத்தின் நடவடிக்கைகள் மிகக் கடுமையானதாக அமைந்துவிட்டதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், நாடாளுமன்றத்தைக் கைப்பற்றியுள்ள ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து புதிய குடியேற்றக் கொள்கை ஒப்பந்தத்தை உருவாக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

“அமெரிக்க இடைத்தேர்தல் நேர்மையாக நடந்ததா?” - வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து ட்ரம்ப் சந்தேகம்
நெதன்யாகு இல்லாத இஸ்ரேல்: ஐசன்கோட் - அரபு கட்சி கூட்டணி அரசின் வாய்ப்புகளும் சவால்களும்

X