சாலைகளை தோண்டும்போது அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க கோரி வழக்கு

தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
சாலைகளை தோண்டும்போது அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க கோரி வழக்கு
Updated on
1 min read

சென்னை: மழைநீர் வடி​கால் பணிக்​காக சாலைகளை தோண்​டும்​போது அனைத்து துறை​களும் இணைந்து செயல்​படும் வகை​யில் வழி​காட்டு நெறி​முறை​களை உரு​வாக்​கக் கோரி தொடரப்​பட்​டுள்ள வழக்​கில், இதுதொடர்​பாக தமிழக அரசு இரு வாரங்​களில் பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக கோட்​டூர்​புரத்​தைச் சேர்ந்த முரளிதரன் என்​பவர், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில் கூறி​யிருந்​த​தாவது:

சென்னை மாநக​ராட்​சிக்​குட்​பட்ட கோட்​டூர்​புரம் பகு​தி​யில் மழைநீர் வடி​கால் அமைக்​கும் பணி கடந்த ஒன்​றரை மாதங்​களாக நடை​பெற்று வரு​கிறது.

இப்​பணி​களுக்​காக சாலைகள் அடிக்​கடி தோண்​டப்​பட்டு சேதப்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. இது​போன்ற பணி​களின்​போது வீடு​களின் மின்​இணைப்பு மற்​றும் குடிநீர் இணைப்​பு​களும், கழி​வுநீர் இணைப்​பு​களும் துண்​டிக்​கப்​படு​வ​தால் பொது​மக்​கள் சிரமம் அடைய வேண்​டி​யுள்​ளது.

மழைநீர் வடி​கால் பணிக்கு பிறகு தோண்​டப்​படும் சாலைகள் மீண்​டும் முறை​யாக சீரமைக்​கப்​ப​டாத​தால் விபத்து அபாய​மும் ஏற்​பட்டு வரு​கிறது. வாக​னங்​களும் போக்​கு​வரத்து நெரிசலில் சிக்​கித் தவிக்க நேரிடு​கிறது.

எனவே, இனிவரும் காலங்​களில் மழைநீர் வடி​கால் உள்​ளிட்ட பணி​களுக்​காக சாலைகளை தோண்​டும்​போது சென்னை மாநக​ராட்​சி, மின் வாரி​யம், குடிநீர் வழங்​கல் மற்​றும் கழி​வுநீர் அகற்று வாரி​யம், காவல்​துறை ஆகிய துறை​கள் இணைந்து செயல்​படும் வகை​யில் வழி​காட்டு நெறி​முறை​களை வகுக்க உத்​தர​விட வேண்​டும்.

அதே​போல், கோட்​டூர் பகு​தி​களில் மேற்​கொள்​ளப்​படும் பணி​களில் பொது​மக்​களுக்கு ஏற்​பட்ட மனஉளைச்​சலுக்கு ஒவ்​வொரு வீட்​டுக்​கும் தலா ரூ.1 லட்​சத்தை இழப்​பீ​டாக வழங்க உத்​தர​விட வேண்​டும்.

இவ்​வாறு மனு​வில் கோரி​யிருந்​தார். இந்த வழக்கை விசா​ரித்த தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜி அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வு, இதுதொடர்​பாக தமிழக அரசு மற்​றும் சம்​பந்​தப்​பட்ட துறை​கள் இரு வாரங்​களில் பதிலளிக்க உத்​தர​விட்டு வி​சா​ரணை​யை தள்​ளி​வைத்​துள்​ளனர்​.

சாலைகளை தோண்டும்போது அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க கோரி வழக்கு
சென்னை | பாஸ்ட் புட் மாஸ்டர் மீது தாக்குதல்: கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in