லைபீரிய கப்பல் மூழ்கியதால் பல மாவட்ட கடற்கரைகளில் படிந்த பிளாஸ்டிக் கழிவை அகற்ற வழக்கு

மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
லைபீரிய கப்பல் மூழ்கியதால் பல மாவட்ட கடற்கரைகளில் படிந்த பிளாஸ்டிக் கழிவை அகற்ற வழக்கு
Updated on
1 min read

மதுரை: கேரள மாநிலம் விழிஞ்​சம் துறை​முகம் அருகே கடலில் கவிழ்ந்த லைபீரிய கப்​பல் மூழ்​கியதால் பல்​வேறு கரையோர மாவட்ட கடற்​கரைகளில் படிந்​துள்ள பிளாஸ்​டிக் துகள்​களை அகற்​றக்​கோரிய வழக்​கில் மத்​திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உயர் நீதி​மன்​றம் உத்தர​விட்​டுள்​ளது.

ராம​நாத​புரம் மாவட்​டம் மோர்​பண்​ணை​யைச் சேர்ந்த வழக்​கறிஞர் தீரன் திரு​முரு​கன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: விழிஞ்​சம் துறை​முகத்​தில் கடந்த 2025 மே 25-ல் லைபீரிய நாட்​டின் எல்​சா-3 என்ற கப்​பல் மூழ்​கியது.

மூக்​கிய கப்​பலில் 643 கன்​டெய்​னர்​களில் 1,400 டன் பிளாஸ்​டிக் நர்ட்​டல்​ஸ், 450 டன் எரிபொருள் எண்​ணெய் மற்​றும் கால்​சி​யம் கார்​பைடு ஹைட்​ராக்சின் உள்​ளிட்ட வேதிப்​பொருட்​கள் இருந்​துள்​ளன.

இதன் விளை​வாக தற்​போது கன்​னி​யாகுமரி, ராம​நாத​புரம், தூத்​துக்​குடி மாவட்ட கடற்​கரைகளில் பிளாஸ்​டிக் துகள்​கள் படிந்​துள்​ளன. இதனால் கடல் நீர் மாசடைந்து கடல் வாழ் உயி​ரினங்​களும் அழி​யும் நிலை ஏற்​பட்​டுள்​ளது.

இந்தச் சம்​பவத்தை கேரள அரசு மாநில பேரிட​ராக அறி​வித்து நிவாரண நடவடிக்​கை மேற்​கொண்டு வரு​கிறது. ஆனால் தமிழக அரசு நிவாரண நடவடிக்​கைகளை மேற்​கொள்​ள​வில்​லை. கேரள அரசு சம்​பந்​தப்​பட்ட கப்​பல் நிறு​வனத்​திடம் ரூ.9,531 கோடி இழப்​பீடு கோரி​யுள்​ளது.

எனவே, லைபீரிய கப்​பல் கவிழ்ந்​த​தால் கன்​னியாகுமரி, ராம​நாத​புரம், தூத்​துக்​குடி, நெல்​லை, தஞ்​சாவூர், புதுக்​கோட்டை மாவட்​டங்​களில் ஏற்​பட்​டுள்ள சுற்​றுச்சூழல் பாதிப்பை கணக்கிட​வும், கடற்​கரை பகு​தி​யில் படிந்​துள்ள எண்​ணெய், பிளாஸ்டிக் துகள்​களை அகற்றவும் நிபுணர் குழு அமைக்க வேண்டும்.

கப்​பல் உரிமையாளரிட​மிருந்து இழப்​பீடு வசூலிக்க நடவடிக்கை எடுக்​க​வும் தமிழக அரசுக்கு உத்தர​விட வேண்​டும். இவ்​வாறு கூறப்​பட்​டிருந்​தது. இந்த மனுவை நீதிப​தி​கள் சதீஷ்கு​மார், ஜோதி​ராமன் அமர்வு விசா​ரித்​து, மனு தொடர்​பாக மத்​திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்​தர​விட்டு விசா​ரணையை ஏப். 29-க்கு தள்​ளி​வைத்​தனர்.

லைபீரிய கப்பல் மூழ்கியதால் பல மாவட்ட கடற்கரைகளில் படிந்த பிளாஸ்டிக் கழிவை அகற்ற வழக்கு
3 ஆண்டுகளாக மாணவிக்கு பாலியல் தொல்லை தந்ததாக அண்ணா பல்கலை. பேராசிரியர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in