“மக்கள் அங்கீகரித்தால் மீண்டும் பேரவைக்கு வருவோம்” - கடைசி நாளில் உறுப்பினர்கள் நெகிழ்ச்சி

“மக்கள் அங்கீகரித்தால் மீண்டும் பேரவைக்கு வருவோம்” - கடைசி நாளில் உறுப்பினர்கள் நெகிழ்ச்சி
Updated on
2 min read

சென்னை: மக்​கள் அங்​கீகரித்​தால் மீண்​டும் சட்​டப்​பேர​வைக்கு வரு​வோம் என 16-வது சட்​டப்​பேர​வை​யின் கடைசி கூட்​டத்​தொடரின் கடைசி நாளில் உறுப்​பினர்​கள் நெகிழ்ச்​சி​யுடன் பேசினர்.

தற்​போதைய 16-வது சட்​டப்​பேர​வை​யின் கடைசி கூட்​டத் தொடரின் கடைசி நாளான நேற்றுசட்​டப்​பேரவை கட்சித் தலை​வர்​கள் தங்​கள் 5 ஆண்டு கால சட்​டப்​பேரவை பணி அனுபவங்​களை​ உருக்​க​மாக​வும் நெகிழ்ச்​சி​யுட​னும் பகிர்ந்​து​கொண்​டனர்.

செல்​வப்​பெருந்​தகை (காங்​கிரஸ்): தமிழகம் இது​வரை கண்​டி​ராத பல திட்​டங்​களை முதல்​வர் ஸ்டா​லின் செயல்​படுத்​தி​யுள்​ளார். நிதி நெருக்கடியைக் கூட சமாளித்​து, தமிழகத்தை தலை நிமிரச் செய்துள்​ளார். மருது சகோ​தரர்​களாக, தமிழகத்​தில் ஸ்டா​லினும் மத்​தி​யில் ராகுல் காந்​தி​யும் எந்த சமரச​மும் இன்றி மக்​கள் நலனுக்​காக போராடி வரு​கின்​றனர்.

ஜி.கே.மணி (பாமக): தொகுதிக்கு நாங்​கள் கேட்​டதை முதல்​வர் ஸ்டா​லின் கொடுத்​தார். கட்​சி, கொள்கை வேறு​பாடு இன்றி அனை​வரை​யும் அரவணைத்து ஆட்சி நடத்​தி​யுள்​ளார். விவ​சா​யிகளின் கடன், மகளிர் குழு​வினர் கடன் மற்​றும் கல்விக் கடன்களை தள்​ளு​படி செய்​வது குறித்து ஆய்வு செய்ய வேண்​டும்..

சிந்​தனை செல்​வன் (விசிக): அண்​ணா, கருணாநிதி ஆட்​சிக்​காலத்​தில் இல்லாதவகை​யில் தற்​போது உள்ள அதிக நெருக்​கடிகளை இயல்பாக கடந்து வந்துள்​ளார். அரசி​யல், பண்​பாட்டு தளங்​களில் தமிழகத்தை தலைநிமிரச் செய்​துள்​ளார்.

பெ.​நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்​யூனிஸ்ட்): மிகப்​பெரிய ஜாம்​ப​வான்​கள் அமர்ந்த இந்த சட்​டப்​பேர​வை​யில் பணி​யாற்​றிய​தில் பெரு​மை. இந்​தி​யா​வில் மதச்​சார்​பின்​மையை பாது​காக்​கக்​கூடிய தலை​வர் ஸ்டா​லின். தனது திட்​டங்​கள் மூலம் இந்​திய நாட்​டுக்கே எடுத்​துக்​காட்​டாக திகழ்​கிறார். மக்​கள் அங்​கீகரித்​தால் மீண்​டும் இந்த பேர​வைக்கு வரு​வோம்.

டி.​ராமச்​சந்​திரன் (இந்​திய கம்​யூனிஸ்ட்): மகளிர் உரிமைத்​தொகை திட்​டம் சாத்​தி​யமா என்று கேட்​டார்​கள். ஆனால், அதை சாத்​தி​ய​மாக்கி சாதித்​துக்​காட்​டி​யிருக்​கிறார். மத்​திய அரசு ஓரவஞ்​சனை காட்​டி​னாலும் இரட்டை இலக்க பொருளா​தார வளர்ச்​சியை தமிழகம் அடைந்​திருக்​கிறது. ஸ்டாலின் மீண்​டும் முதல்​வர் ஆவார்.

சி.சதன் திரு​மலைகு​மார் (மதி​முக): இந்​தி​யா​வில் உள்ள அனைத்து முதல்​வர்​களுக்​கும் முன்​மா​திரி முதல்​வ​ராக திகழ்​கிறார் ஸ்டா​லின். விளம்​புநிலை மக்​களை தூக்​கி​விட வேண்​டும் என்றஎண்​ணம் கொண்​ட​வர்.

எம்​.எச்​.ஜ​வாஹிருல்லா (மமக): எல்​லாருக்கும் எல்​லாம் என்​பது​தான் இந்த ஐந்​தாண்டு கால திமுக ஆட்​சி​யின் கொள்​கை. அடுத்த தலை​முறை குறித்து சிந்​தித்து மிகப்​பெரிய தலை​வ​ராக விளங்​கு​கிறார் ஸ்டா​லின். இது கல்வி புரட்​சி​யின் காலம். சமூக நீ​திக்கு எதி​ரான சதியை முதல்​வர் முறியடித்​திருக்​கிறார்.

ஈ.ஆர்​.ஈஸ்​வரன் (கொமதேக): 5 ஆண்​டு​கள் சிறப்​பாக பணி​யாற்​றி​யுள்​ளேன் என்ற மனநிறைவோடு இருக்​கிறேன். ஸ்டா​லின் என்ற தனது பெயருக்கு ஏற்ப எதிர்ப்​பு​களை நெஞ்​சுரத்​தோடு எதிர்​கொண்​ட​வர் முதல்​வர்.

தி.வேல்​முரு​கன் (தவாக): ஒரு பண்​பட்ட அரசி​யல் சூழலை உரு​வாக்​கியது திமுக கட்​சி. மக்​கள் பிரச்​சினை​களுக்​காக பேசும்​போது ஆளுங்​கட்​சி​யை​யும் விமர்​சித்​துள்​ளேன். ஆனால், அதற்​காக முதல்​வர் என்னை ஒரு​போதும் கடிந்​து​கொண்​டதில்லை.

தொடர்ந்து கூட்​டம் முடிவடைந்த பிறகு முதல்​வர் ஸ்டா​லின் சட்​டப்​பேரவை கட்​சித் தலை​வர்​களின் இருக்​கைக்​குச் சென்று அனை​வருக்​கும் கைகுலுக்கி வாழ்த்து தெரி​வித்​தார். கட்சி தலை​வர்​கள் முதல்​வருடன் புகைப்படம் எடுத்​தனர்​. தி​முக உறுப்​பினர்​கள்​ முதல்​வருக்​கு புத்​தகங்​கள் பரி​சாக வழங்​கினர்​.

“மக்கள் அங்கீகரித்தால் மீண்டும் பேரவைக்கு வருவோம்” - கடைசி நாளில் உறுப்பினர்கள் நெகிழ்ச்சி
டெல்லி ஏஐ உச்சி மாநாட்டில் சட்டைகளை கழற்றி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in