

பழநி - கொடைக்கானல் மலைச்சாலையில் பி.எல்.செட் அருகே சாலையில் சரிந்து விழுந்த பாறைகள்.
பழநி: கடந்த 2 நாட்களாக பழநி, கொடைக்கானலில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய விடிய மழை பெய்தது. கனமழையால் நேற்று காலை பழநி-கொடைக்கானல் மலைச்சாலையில் சவரிக்காடு அருகே மண் சரிவு ஏற்பட்டது. இதேபோல், பி.எல்.செட் என்ற பகுதியில் பாறைகள் சரிந்து சாலையில் குறுக்கே விழுந்தது. அந்த நேரத்தில் வாகனங்கள் வராததால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. மண் சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நெடுஞ்சாலைத் துறையினர் பொதுமக்கள் உதவியுடன் மண் சரிவு ஏற்பட்ட இடத்தை சீரமைத்தனர். தொடர்ந்து மரங்களும் சாய்ந்தன. இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி பழநி-கொடைக்கானல் மலைச்சாலையில் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டது.