

ஊட்டி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை அக். 16-க்கு தள்ளிவைக்கப்பட்டது.
கோடநாடு கொலை கொள்ளை தொடர்பான வழக்கு ஊட்டி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் காமேஸ்வரன் ஆஜரானார். இவ்வழக்கில், ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான சிபிசிஐடி போலீஸாரும் ஆஜராகினர். குற்றம்சாட்டப்பட்டவர்களில் வாளையார் மனோஜ் மட்டும் ஆஜரானார்.
இந்நிலையில், மாவட்ட நீதிபதி முரளிதரன் விடுப்பில் சென்றதால், மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்ரீதர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது விசாரணையை அக். 16-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.