பாஜக அமைப்பு பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட கேசவ விநாயகத்துக்கு ஆர்எஸ்எஸ்-ல் புதிய பதவி

பாஜக அமைப்பு பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட கேசவ விநாயகத்துக்கு ஆர்எஸ்எஸ்-ல் புதிய பதவி
Updated on
1 min read

சென்னை: தமிழக பாஜக அமைப்பு பொதுச்​ செய​லா​ளர் பதவி​யில் இருந்து விடுவிக்​கப்​பட்​ட கேசவ விநாயகத்​துக்கு ஆர்​எஸ்​எஸ் அமைப்​பில் புதிய பொறுப்பு வழங்​கப்​பட்டுள்​ளது. இதைதொடர்ந்து தமிழக பாஜக தலை​வர்​கள் பிரிவு உபசரிப்பு விழா நடத்தி அவரை வழியனுப்பி வைத்​தனர்.

ஆர்​எஸ்​எஸ் இயக்​கத்​தில் பணி​யாற்​றிய கேசவ விநாயகன், கடந்த 2015-ம் ஆண்டு தமிழக பாஜக​வின் அமைப்பு பொதுச் செய​லா​ள​ராக நியமிக்​கப்​பட்டார்.

இந்​நிலை​யில், ஆர்எஸ்எஸ்​ அமைப்பின் முக்​கிய ஆலோ​சனைக் கூட்​டம் சென்​னை​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. இதில் தமிழக பாஜக அமைப்பு பொதுச்​செய​லா​ளர் பதவி​யில் இருந்து கேசவ விநாயகத்தை விடுவிக்​க​வும் ஆர்​எஸ்​எஸ்-ல் புதிய பொறுப்பு வழங்​க​வும் முடிவு எடுக்​கப்​பட்​டது. அதன்படி, அவர் விடுவிக்​கப்​பட்​டார்.

இந்​நிலை​யில், ஆர்​எஸ்​எஸ் தென்​பாரத செய்தி தொடர்​பாளர் ராம் வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பில் கூறியிருப்பதாவது:

ஆர்​எஸ்​எஸ் அமைப்​பின் முழு நேர ஊழியர்​கள் நிர்​வாக காரணங்​களுக்​காக பல்​வேறு பொறுப்​பு​களுக்கு மாற்​றப்​படுவது பல ஆண்​டாக தொடர்ந்து நடை​முறை​யில் இருந்து வரு​கிறது. இதன் அடிப்​படை​யில், தமிழக பாஜக அமைப்பு பொதுச்​ செய​லா​ள​ராக பொறுப்பு வகித்த கேசவ விநாயகன், இனி தமிழகம் முழு​வதும் சத்​பாவ் (சமு​தாய நல்​லெண்​ணம்) என்ற பொறுப்​பில்

செயல்​படு​வார். அத்​துடன் வடதமிழகத்​தின் ஆர்​எஸ்​எஸ் மாநில செயற்​குழு உறுப்​பின​ராக செயல்​படு​வார். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது. கடந்த 11 ஆண்​டு​களாகத் தமிழக பாஜக​வின் அமைப்பு பொதுச்​செய​லா​ள​ராக இருந்த கேசவ விநாயகன், கட்​சி​யின் அதி​கார மைய​மாகத் திகழ்ந்​தவர்.

இந்​நிலை​யில், 2026 தமிழக சட்​டப்​ பேர​வைத் தேர்​தலை முன்​னிட்டு கட்​சியை வலுப்​படுத்​த​வும், புதிய உத்​தி​களை வகுக்​க​வும் இந்த மாற்​றம் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ள​தாக அரசி​யல் வட்​டாரங்​கள் தெரிவிக்​கின்​றன. கேசவ விநாயகத்​துக்​குப் பதிலாக, ஆர்​எஸ்​எஸ்-ஐ சேர்ந்த பிரசோப குமார் அமைப்பு பொதுச்​செய​லா​ள​ராக நியமிக்​கப்பட வாய்ப்​புள்​ள​தாக பாஜக வட்​டாரங்​கள் தெரிவிக்​கின்​றன.

இதற்​கிடை​யில், பாஜக தலைமை அலு​வல​கத்​தில் கேசவ விநாயகத்​துக்கு நேற்று பிரிவு உபசரிப்பு விழா நடந்​தது. இதில் மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், தேசிய பொதுச்​செய​லா​ளர் பி.எல்​.சந்​தோஷ், முன்​னாள் மாநில தலை​வர் அண்​ணா​மலை உள்​ளிட்டோர் பங்கேற்றனர்​.

பாஜக அமைப்பு பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட கேசவ விநாயகத்துக்கு ஆர்எஸ்எஸ்-ல் புதிய பதவி
பாதி வேக வைத்த கோழி இறைச்சியை உண்ண வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in