

சென்னை: தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து கேசவ விநாயகம் விடுவிக்கப்பட்டுள்ளார். சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் ஆர்எஸ்எஸ் - பாஜக நிர்வாகிகளின் கூட்டு கூட்டம் பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் நடந்தது.
இதில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து கேசவ விநாயகத்தை விடுவிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணாமலை உள்ளிட்டோர் கேசவ விநாயகத்தை மாற்ற வேண்டும் என்று அறிவுறுத்திய தாகவும், புகார்கள் காரணமாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்ட தாக கூறப்படுகிறது.
சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து கேசவ விநாயகம் விடுவிக்கப்பட்டிருப் பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.