நீலகிரியில் தமிழக பகுதியை உரிமை கொண்டாடும் கேரளம்: இரு மாநில போலீஸார் குவிப்பு

நீலகிரி மாவட்டம் தாளூர் பகுதியில் வைக்கப்பட்டுள்ள கேரள மாநில அறிவிப்பு பகுதி.

நீலகிரி மாவட்டம் தாளூர் பகுதியில் வைக்கப்பட்டுள்ள கேரள மாநில அறிவிப்பு பகுதி.

Updated on
1 min read

பந்தலூர்: பந்​தலூர் அருகே தமிழக பகு​தியை கேரள மாநிலம் உரிமை கொண்​டாடி அறி​விப்பு பலகை வைத்​துள்​ள​தால் பரபரப்பு ஏற்​பட்டுள்​ளது. அறி​விப்பு பலகையை அகற்ற கோரி​யுள்​ள​தாக நீலகிரி மாவட்ட ஆட்​சி​யர் லட்​சுமி பவ்யா தெரி​வித்​துள்ளார்.

நீலகிரி மாவட்​டம் பந்​தலூர் அருகே தமிழக, கேரள எல்​லை​யாக தாளூர் பகுதி உள்​ளது. இங்​குள்ள ஒரு பாலம் இரு மாநிலங்​களை​யும் பிரிக்​கிறது. இந்​நிலை​யில், இப்​பகு​தி​யில் கேரள மாநில பொதுப்​பணி துறை சார்​பில் கேரளா உங்​களை வரவேற்​கிறது என அறி​விப்பு பலகை வைக்​கப்​பட்​டுள்​ளது.

இதனால், அப்​பகு​தி​யில் பரபரப்பு ஏற்​பட்​டது. தமிழ்​நாடு பகு​தியை கேரள மாநிலம் சொந்​தம் கொண்​டாடு​வ​தாகக் கூறி அப்​பகுதி மக்​கள் அங்கு திரண்​ட​தாக பதற்​ற​மான சூழல் ஏற்​பட்​டது. இதனால், இரு மாநில போலீ​ஸாரும் அங்கு குவிக்​கப்​பட்டனர்.

இந்​நிலை​யில், மக்​களிடம் வரு​வாய்த் துறை அதி​காரி​கள் பேச்​சு​வார்த்தை நடத்​தினர். உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும் என உறு​தி​யளித்​தனர். கடந்த 2018-ம் ஆண்டு தமிழக பகு​தி​யில் கேரளம் சார்​பில் அறி​விப்பு பலகை வைக்​கப்​பட்​டது. கேரள நெடுஞ்​சாலை துறை​யினர் அப்​பகுதி கேரளா​வைச் சேர்ந்​தது என்று குறிக்​கும் வகை​யில் சிவப்பு கோடு போட்​டனர்.

மேலும், ‘நென்​மேணி ஊராட்சி உங்​களை வரவேற்​கிறது’ என்று தமிழக எல்​லை​யில் அறி​விப்பு பலகை வைத்​தனர். இதை அறிந்த நாம் தமிழர் கட்​சி​யினர் நீலகிரி ஆட்​சி​யரிடம் புகார் அளித்​தனர்.

இந்​நிலை​யில், இப்​பிரச்​சினை மீண்​டும் எழுந்​துள்​ளது. தற்​போது மீண்​டும் கேரள மாநிலம் சார்​பில் அறி​விப்பு பலகை வைக்​கப்​பட்​டுள்​ளது சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இது குறித்து மாவட்ட ஆட்​சி​யர் லட்​சுமி பவ்​யா​விடம் கேட்​ட​போது, ‘தமிழ்​நாடு எல்​லை​யான தாளூரில் கேரளாவின் வயநாடு மாவட்ட எல்​லை​யும் உள்​ளது.

அப்​பகு​தி​யில் அறி​விப்பு பலகை வைக்​கப்​பட்​ட​தால் பிரச்​சினை எழுந்​துள்​ளது. இதுகுறித்து வயநாடு ஆட்​சி​யரிடம் பேசி​யுள்​ளோம். ஏற்​கெனவே இருந்த அறி​விப்பு பலகைக்கு பதிலாக புதிய பலகை வைத்​துள்​ளனர். அதை அகற்ற கூறி​யுள்​ளோம்.

இந்த பிரச்​சினை தொடர்​பாக இரு மாநிலம் சார்​பில் டிஜிட்​டல் சர்வே செய்​யப்​பட​வுள்​ளது. அது​வரை முன்​பிருந்த நிலையே தொடர வேண்​டும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இரு மாநிலங்​கள் சார்​பில் சர்வே முடிந்​ததும் எல்லை குறித்து முடிவு செய்​யப்​படும்’ என்​றார்.

<div class="paragraphs"><p>நீலகிரி மாவட்டம் தாளூர் பகுதியில் வைக்கப்பட்டுள்ள கேரள மாநில அறிவிப்பு பகுதி.</p></div>
உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பொறுப்பேற்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in