தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும்: கேஜ்ரிவால் நம்பிக்கை

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும்: கேஜ்ரிவால் நம்பிக்கை
Updated on
1 min read

சென்னை: கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்​சி​யில் தமிழகம் நல்ல வளர்ச்சி அடைந்​துள்​ளது. எனவே, தமிழகத்​தில் மீண்​டும் திமுக ஆட்சி அமைக்​கும் என்று டெல்லி முன்​னாள் முதல்​வர் அர்​விந்த் கேஜ்ரிவால் நம்​பிக்கை தெரி​வித்​தார்.

திமுக கூட்​டணி வேட்​பாளர்​களை ஆதரித்து பிரச்​சா​ரம் மேற்​கொள்​வதற்​காக டெல்லி முன்​னாள் முதல்​வரும் ஆம் ஆத்மி கட்​சி​யின் தேசிய ஒருங்​கிணைப்​பாள​ரு​மான அர்​விந்த் கேஜ்ரிவால் நேற்று இரவு சென்னை வந்​தார்.

விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: எனது நண்​பர் மு.க.ஸ்​டா​லின் நடத்​திய 5 ஆண்டு கால ஆட்​சி​யில், தமிழகத்​துக்கு நல்ல வளர்ச்சி திட்​டத்தை ஏற்​படுத்தி உள்​ளார்.

அதனால் தமிழகம் முன்​னேறிய மாநில​மாக ஆகிக் கொண்டு இருக்​கிறது. இந்​தத் தேர்​தலில் ஸ்டா​லின் அதிக மெஜாரிட்​டி​யுடன் வெற்றி பெற்​று, மீண்​டும் ஆட்சி அமைப்​பார்.

மாநிலங்​களில் உள்ள ஆட்​சி​யாளர்​களை, மோடி அரசு தனது கைக்​குள்வைத்​துக் கொள்ள வேண்​டும் என்று நினைக்​கிறது.

ஆனால், ஸ்டா​லின் அதை ஏற்​றுக் கொள்​ள​வில்​லை. இதனால், ஸ்டா​லினை பாஜக எதிர்க்​கிறது. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும்: கேஜ்ரிவால் நம்பிக்கை
மயிலாப்பூர், ஆயிரம் விளக்கு, தி.நகர் திமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in