மயிலாப்பூர், ஆயிரம் விளக்கு, தி.நகர் திமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிப்பு

மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் த.வேலுவை ஆதரித்து பிரச்சாரம் செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.

மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் த.வேலுவை ஆதரித்து பிரச்சாரம் செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Updated on
1 min read

சென்னை: சென்​னை​யில் மயி​லாப்​பூர், ஆயிரம் விளக்​கு, தி.நகர் தொகுதி திமுக வேட்​பாளர்​களை ஆதரித்து எல்​டாம்ஸ் சாலை முதல் தி.நகர் வரை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று சாலைவலம் நடத்​தி வாக்கு சேகரித்தார்.

சென்னை போட்​டி​யிடும் திமுக வேட்​பாளர்​களை ஆதரித்து ஆழ்​வார்ப்​பேட்டை எல்​டாம்ஸ் சாலை முதல் தி.நகர் வரை முதல்​வரும், திமுக தலை​வரு​மான மு.க.ஸ்​டா​லின் நேற்று சாலை வலம் (ரோடு ஷோ) வந்​தார். முதலா​வ​தாக மயி​லாப்​பூர் தொகு​தி​யில் திமுக சார்​பில் போட்​டி​யிடும் த.வேலுவை ஆதரித்து எல்​டாம்ஸ் சாலை​யில் ரோடு ஷோ நடத்​தி​னார்.

அவர் வருகை தந்த வழியெங்​கும், சாலை​யில் இரு​புறம் பொது​மக்​கள் கூட்​டம் கூட்​ட​மாக நின்று அவருக்கு மலர் தூவி பிர​மாண்ட வரவேற்பு அளித்​தனர். ரோடுஷோ​வில் தொகுதி வேட்​பாளர்​களு​டன் வலம் வந்த முதல்வர் ஸ்டா​லின், வாக​னத்​தில் நின்​ற​வாறு பொது​மக்​களை பார்த்து கையசைத்​த​வாறு வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட்​டார்.

அப்​போது தொண்​டர்​களும், பொது​மக்​களும் வழங்​கிய பரிசு பொருட்​களை​யும் அவர் வாங்​கிக் கொண்​டார். மயி​லாப்​பூர் பரப்​புரை​யில் முதல்​வர் ஸ்டா​லின் பேசுகை​யில், “மயி​லாப்​பூர் தொகு​தி​யில் த.வேலு ஏற்​கெனவே சட்​டப்​பேரவை உறுப்​பின​ராக இருந்து எப்​படி​யெல்​லாம் பணி​யாற்றி இருக்​கிறார் என்​பது உங்​களுக்கு எல்​லாம் தெரி​யும்.

கூப்​பிட்ட குரலுக்கு ஓடி வரக்​கூடிய சேவக​னாக, ஒரு தொண்​ட​னாக, உங்​கள் வீட்டு பிள்​ளை​யாக இருந்து அவர் பணி​யாற்​றிய பாங்கை பார்த்து நானே வியந்​திருக்​கிறேன், பாராட்​டி​யிருக்​கிறேன்.

ஒரு சட்​டப்​பேரவை உறுப்​பினர் எப்​படி இருக்க வேண்​டும் என்​ப​தற்கு எடுத்​துக்​காட்​டாக மயிலை வேலு திகழ்ந்​திருக்​கிறார். அதனால் தான் அவரை மீண்​டும் வேட்​பாள​ராக தேர்வு செய்து நிறுத்​தி​யிருக்​கிறேன். எனவே, உதய சூரியனுக்கு நீங்​கள் ஆதரவு தந்​து, மயிலை த.வேலுவை பெரியளவி​லான வாக்கு வித்​தி​யாசத்​தில் வெற்​றி​பெற வைக்க வேண்​டும்” என்று கேட்​டுக்​கொண்​டார்.

இதனைத்​தொடர்ந்து ஆயிரம் விளக்கு தொகு​தி​யில் போட்​டி​யிடும் எழிலன் நாக​நாதனை​யும், தி.நகர் தொகு​தி​யில் போட்​டி​யிடும் ராஜா அன்​பழக​னை​யும் ஆதரித்து ஆயிரம் விளக்கு தாமஸ் சாலை, தி.நகர் பர்​கிட் சாலை வழி​யாக ரோடு ஷோவில் வலம் வந்​தார்.

வழிநெடு​கிழும் பொது​மக்​கள் திரண்டு உற்​சாக வரவேற்பு அளித்​தனர். பின்​னர், பரப்​புரை​யில் முதல்வர் மு.க.ஸ்​டா​லின் பேசுகை​யில், “சென்​னையை​யும், என்​னையை​யும் யாராலும் பிரிக்க முடி​யாது.

அடுத்த 2 நாட்​கள் சென்​னை​யில் தான் தெரு, தெரு​வாக சென்று வாக்கு சேகரிக்க போகிறேன். வரவிருக்​கும் சட்​டப்​பேரவை தேர்​தலிலும் 200-க்​கும் மேலே வெற்​றி​பெறு​வோம் என்று எதிர்​பார்த்​தேன்.

ஆனால் 234 தொகு​தி​களி​லும் வெற்​றி​பெற்​றால் அதில் ஆச்​சரி​யம் இல்​லை. அது வந்​தால் தான் நம்மை கண்டு பயப்​படு​வார்​கள்​. இல்​லை​யென்​றால்​ தமிழகத்​தை குட்​டிச்​ சுவ​ராக்​கி விடு​வார்​கள்​” என்​று பேசி​னார்​.

<div class="paragraphs"><p>மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் த.வேலுவை ஆதரித்து பிரச்சாரம் செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.</p></div>
தாம்பரம் இரும்புலியூர் அருகே ரயில்வே நடைமேம்பாலம் அமைக்கப்படும்: அதிமுக வேட்பாளர் வாக்குறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in