தொகுதி பங்கீடு தொடர்பாக ஸ்டாலினுடன் கே.சி.வேணுகோபால் ஆலோசனை

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
2 min read

சென்னை: சென்​னை​யில் முதல்​வர் ஸ்டா​லினை காங்​கிரஸ் அகில இந்​திய பொதுச் செய​லா​ளர் கே.சி.வேணுகோ​பால் நேற்று சந்​தித்து ஆலோ​சனை நடத்​தி​னார்.

கடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக கூட்​ட​ணி​யில் 25 தொகு​தி​களில் போட்​டி​யிட்ட காங்​கிரஸ் கட்சி 18 இடங்​களில் வென்​றது. ஆனால், இந்த முறை “ஆட்​சி​யில் பங்​கு, கூடு​தல் தொகு​தி​கள் என கட்சி நிர்​வாகி​கள் மாணிக்​கம் தாகூர், பிர​வீன் சக்​கர​வர்த்தி போன்​றோர் போர்க்​கொடி தூக்​கினர். இதற்கு திமுக தரப்​பிலிருந்​தும் பதிலடிகள் வர, கூட்​ட​ணிக்​குள் விரிசல் விழுமோ என்ற பதற்​றம் நில​வியது.

இந்​தச் சூழலில் சென்னை வந்த காங்​கிரஸ் அகில இந்​திய பொதுச் செய​லா​ளர் கே.சி. வேணுகோ​பால், “தி​முக - காங்​கிரஸ் கூட்​டணி உறு​தி​யாக உள்​ளது; ஆட்​சி​யில் பங்கு என்​பது காங்​கிரஸின் அதி​காரப்​பூர்வ நிலைப்​பாடு அல்ல” என விளக்​கமளித்​தார்.

இருப்​பினும், ராகுல் காந்​திக்கு தெரிந்தே இந்த சர்ச்​சையைக் கிளப்​பு​கிறார்​களோ என்ற சந்​தேகம் திமுக தலை​மைக்கு இருந்​தது. இதைத் தொடர்ந்து வேணுகோ​பால் பலமுறை முயன்​றும், ஸ்டா​லினுட​னான சந்​திப்பு தள்​ளிப்​போய்க் கொண்டே போனது.

இந்​நிலை​யில் திடீர் திருப்​ப​மாக நேற்று இரவு 9 மணிக்கு சென்னை வந்த கே.சி.வேணுகோ​பால் ஆழ்​வார்​பேட்​டை​யில் உள்ள முதல்​வர் இல்​லத்​தில் ஸ்டா​லினை சந்​தித்​துப் பேசி​னார்.

இதில் கனி​மொழி எம்​.பி. மற்​றும் சத்​தீஸ்​கர் மாநில முன்​னாள் துணை முதல்​வர் சிங் தியோ ஆகியோர் மட்​டுமே பங்​கேற்​றனர். சந்​திப்​பின்​போது ராகுலிடம் ஸ்டா​லின் தொலைபேசி​யில் பேசி​யுள்​ளார்.

இந்​தச் சந்​திப்​பில், முதல்​வர் இல்​லத்​தில் தயார் செய்​யப்​பட்ட உணவை அருந்​தி​யபடியே தொகு​திப் பங்​கீடு குறித்து விவா​திக்​கப்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது.

இதுகுறித்து காங்​கிரஸ், திமுக கட்​சிகளின் மூத்த தலை​வர்​கள் சிலர் கூறிய​தாவது: மாணிக்​கம் தாகூர் எம்​.பி., நிர்​வாகி பிர​வீன் சக்​கர​வர்த்தி ஆகியோரின் விமர்​சனங்​கள் எல்லை மீறிச் செல்​வ​தாக​வும், இவ்​வளவு கசப்​பு​களுக்​குப் பிறகு கூட்​ட​ணி​யைத் தொடர வேண்​டுமா என்​றும் அமைச்​சர்​கள் பலரே முதல்​வரிடம் கேள்வி எழுப்​பினர்.

அதற்கு ஸ்டா​லின், ‘தேர்​தல் நேரத்​தில் நமக்​குச் சட்​டரீ​தி​யாக​வும், அரசி​யல் ரீதி​யாக​வும் பல முட்​டுக்​கட்​டைகள் வர வாய்ப்​புள்​ளது. அதை நாடாளு​மன்​றத்​தில் எதிர்த்​துப் பேசுவதற்கு காங்​கிரஸின் பலம் நமக்கு அவசி​யம் தேவை எனக் கூறி​னார்.

இதனைத் தொடர்ந்​து, ஸ்டா​லின் நேரடி​யாக சோனியா காந்​தியை தொடர்​பு​கொண்டு நிலை​மையை விளக்​கி​யுள்​ளார். இதையடுத்து ராகுலை அழைத்​துப் பேசிய சோனி​யா, ‘தி​முக நமக்கு இக்​கட்​டான பல நேரங்​களில் தோள் கொடுத்த கட்​சி, அவர்​களை இழப்​பது சரி​யான முடி​வாக இருக்​காது’ என கூறி​யிருக்​கிறார்.

அதற்கு ராகுல், ‘கடந்த முறையே 40 இடங்​கள் என்​ப​தில் நான் பிடி​வாத​மாக இருந்​தேன், நீங்​கள்​தான் 25-க்கு ஒப்​புக் கொண்​டீர்​கள். இப்​போதும் அப்​படியே​வா’ எனக் கேட்​டுள்​ளார். ‘பாஜக தமிழகத்​துக்​குள் காலூன்ற நாமே வழி ஏற்​படுத்​திக்கொடுத்​து​விடக் கூடாது. கூட்​டணி பலத்​துக்​காக சில​வற்றை விட்​டுக் கொடுத்​து​தான் ஆக வேண்​டும்’ என சோனியா கறா​ராகக் கூறி​விட்​டார்.

இதன் பின்​னரே, ராகுல் காந்​தி​யின் உத்​தர​வின்​பேரில் அவசர அவசர​மாக வேணுகோ​பால் சென்​னைக்கு அனுப்பி வைக்​கப்​பட்டு இந்த சந்​திப்பு நிகழ்​துள்​ளது. இவ்​வாறு கட்சி நிர்​வாகி​கள் தெரி​வித்​தனர். அடுத்​தகட்​ட​மாக காங்​கிரஸ் பேச்​சு​வார்த்​தைக் குழு தொகு​திபங்​கீடு குறித்​து பேச்​சு நடத்​தும்​ என தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
“எத்தனை கூட்டணி சேர்த்தாலும் திமுக மூழ்கப்போகும் கப்பல்” - செல்லூர் ராஜூ ஆரூடம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in