“கனவைச் சொன்னால் பலனைச் சொல்வார்களா?” - கஸ்தூரி கலகல

பொங்கல் விழாவில் மாட்டு வண்டியில் வந்த கஸ்தூரி.

பொங்கல் விழாவில் மாட்டு வண்டியில் வந்த கஸ்தூரி.

Updated on
1 min read

தரு​மபுரி மாவட்​டம் அரூர் சட்​டப்​பேர​வைத் தொகுதி பாஜக சார்​பில் பொங்​கல் விழா மொரப்​பூரில் நேற்று நடை​பெற்​றது.

சிறப்பு விருந்​தின​ராக பாஜக கலை, கலா​சார பிரிவு மாநில செய​லா​ளர் நடிகை கஸ்​தூரி கலந்து கொண்​டார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பாஜக நிர்​வாகி​யாக​வும், தனிப்​பட்ட ரசிகை​யாக​வும் விஜய் படங்​களை விநி​யோகித்​துக் கொண்​டிருந்த விநி​யோகஸ்​த​ராக​வும் சொல்​கிறேன், ‘ஜன நாயகன்’ படம் தணிக்​கைக்கு உட்​பட்டு சரி​யான சான்​றிதழுடன் விரை​வில் திரைக்கு வேண்​டும்.

நீதி​மன்​றத்தை அணு​காமல் தணிக்கை குழுவை அணுகி​யிருந்​தால் முன் கூட்​டியே தீர்வு கண்​டிருக்​கலாம். தயா​ரிப்பு தரப்​பில் அனுபவம் இல்​லாமல் இவ்​வாறு செய்​து​விட்​டனர் என்ற வருத்​தம் உள்​ளது. இதற்​கும் மத்​திய அரசுக்​கும் சம்​பந்​தம் இல்​லை.

முதல்​வர் ஸ்டா​லின் தேர்​தலை குறி​வைத்து பல திட்​டங்​களை அறி​வித்து வரு​கி​றார். செவிலியர்​கள், ஆசிரியர்​கள் போராடி வரு​கின்​ற​னர். ஜாக்டோ - ஜியோ போராட்​டம் அறி​வித்த நிலை​யில் உடனடி​யாக ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அறி​வித்​துள்​ளனர். இது பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டம் இல்​லை. எப்​போது வேண்​டு​மா​னாலும் வெடிக்​கும். தூய்​மைப் பணி​யாளர்​களை நடு இரவில் கைது செய்​கின்​ற​னர்.

ஜனவரி பிறந்​தவுடன் மாண​வர்​களுக்கு 10 லட்​சம் மடிக்​கணினிகள், 3 ஆயிரம் பொங்​கல் பரிசு என பல திட்​டங்​களை அறி​வித்து வரு​கின்​ற​னர். ‘உங்க கனவ சொல்​லுங்க’ என்ற திட்​டத்தை முதல்​வர் அறி​வித்​துள்​ளார். பிரச்​சினை​கள் குறித்து 4 ஆண்​டு​களாக சொல்​லி​யும் நடவடிக்கை இல்​லை.

இப்​போது உங்க கனவ சொல்​லுங்​கன்னு சொல்​கி​றார். பல்​லிக்கு பலன், கை ரேகை பலன் போல கனவுக்கு என்ன பலன் அப்​படீன்னு சொல்​லப் போகி​றார்​களா? தீய சக்தி திமுக-வுக்கு எதி​ராக அத்​தனை கட்​சிகளும் தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் சேர வாய்ப்பு உள்​ளது. திமுக கூட்​ட​ணி​யில் உள்​ளவர்​களும் வெளி​யேறு​வதற்​கான வாய்ப்பு உள்​ளது. இவ்​வாறு அவர் கூறி​னார்​

<div class="paragraphs"><p>பொங்கல் விழாவில் மாட்டு வண்டியில் வந்த கஸ்தூரி.</p></div>
“200 தொகுதிகளுக்கும் அதிகமாக வெல்வோம்” - பொங்கல் விழாவில் ஸ்டாலின் நம்பிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in