“ஆட்சி நிர்வாகம், மாநில உரிமைகளில் பங்களிப்பு...” - கருணாநிதி பிறந்தநாளில் முதல்வர் விஜய் புகழாரம்

“ஆட்சி நிர்வாகம், மாநில உரிமைகளில் பங்களிப்பு...” - கருணாநிதி பிறந்தநாளில் முதல்வர் விஜய் புகழாரம்
Updated on
1 min read

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாளை ஒட்டி தமிழக முதல்வர் விஜய், “தமிழ் மொழி, இலக்கியம், திரைத்துறை, அரசியல், ஆட்சி நிர்வாகம் மற்றும் மாநில உரிமைகள் போன்றவற்றில் முன்னாள் முதல்வர் கருணாதியின் பங்களிப்பை நினைவுகூர்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் அவரை நினைவு கூர்ந்து, புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், இது தொடர்பாக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள சமூகவலைதளப் பதிவில், “ முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் 103-வது பிறந்தநாளில், தமிழ் மொழி, இலக்கியம், திரைத்துறை, அரசியல், ஆட்சி நிர்வாகம் மற்றும் மாநில உரிமைகள் போன்றவற்றில் அவரது பங்களிப்பை நினைவுகூர்கிறேன்.

அவருடைய பிறந்த நாளில் எனது மரியாதை கலந்த வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

“ஆட்சி நிர்வாகம், மாநில உரிமைகளில் பங்களிப்பு...” - கருணாநிதி பிறந்தநாளில் முதல்வர் விஜய் புகழாரம்
டெல்லி உணவகத்தில் பயங்கர தீ விபத்து: பலி 21 ஆக அதிகரிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in