தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை; திமுகதான் தாமதம் செய்கிறது: கார்த்தி சிதம்பரம் கருத்து

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை; திமுகதான் தாமதம் செய்கிறது: கார்த்தி சிதம்பரம் கருத்து
Updated on
1 min read

புதுக்​கோட்டை: கூட்டணி குறித்து பேச்​சு​வார்த்தை நடத்த குழு அமைக்​காமல் தாமதப்​படுத்​து​வது திமுகதான் என்று கார்த்தி சிதம்​பரம் எம்​.பி. கூறி​னார். புதுக்​கோட்​டை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: கூட்​டணி பேச்​சு​வார்த்தை நடத்த காங்​கிரஸ் கட்சி குழு அமைத்​துள்​ளது. குழு அமைக்​காமல் தாம​திப்​பது திமுகதான்.

குழு அமைத்து பேச்​சு​வார்த்தை நடத்​தி​விட்​டால், விமர்​சனங்​கள் எழாது. இல்​லா​விட்​டால் சமூக வலை​தளங்​களில் வரும் விமர்​சனங்​களை சகித்​துக் கொள்​ளத்​தான் வேண்​டும்.

விரைவில் சரியாகிவிடும்.. கல்​யாணத்​துக்கு ஏற்​பாடு செய்​யும்​போது சில சங்​கடங்​கள் இருக்​கத்​தான் செய்​யும். முகூர்த்த நேரத்​தின்​போது எல்​லாம் சரி​யாகி விடும் என்​ப​தைப்​போல, காங்​கிரஸ்-திமுக கூட்​டணி பேச்​சு​வார்த்​தை​யும் தேர்​தல் நேரத்​தில் சரி​யாகி​விடும்.

காங்​கிரஸ் இருந்​தால்​தான் அந்​தக் கூட்​ட​ணிக்கு மதச்​சார்​பின்மை என்ற அடை​யாளம் கிடைக்​கும். அப்​போது​தான் சிறு​பான்​மை​யின மக்​களுக்கு நம்​பிக்கை உரு​வாகும். இல்லா​விட்​டால் நம்​பிக்கை ஏற்​ப​டாது.

காங்​கிரஸ் கட்​சிக்கு தனிப்​பட்ட முறை​யில் குறிப்​பிட்ட அளவுக்​கு​தான் வாக்​கு​கள் உள்​ளன. ஆனால், கூட்​ட​ணி​யில் சேர்ந்​து​விட்​டால் எங்​களை கூட்​டலாக மட்​டும் பார்க்​கக் கூடாது, பெருக்​கலாக பார்க்க வேண்​டும்.

விஜய் பெரிய நடிகர். அவருக்​கென்று ரசிகர் கூட்​டம் உள்​ளது. அது வாக்கு வங்​கி​யாக மாறு​வதற்​கும் வாய்ப்பு உள்​ளது. ஆனால், தேர்​தலில் வெற்றி கிடைக்​குமா என்​பதை என்​னால் உறு​தி​யாக கூற முடி​யாது. இவ்​வாறு அவர் கூறினார்​.

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை; திமுகதான் தாமதம் செய்கிறது: கார்த்தி சிதம்பரம் கருத்து
குடியாத்தம் முன்னாள் எம்எல்ஏ கு.லிங்கமுத்து காலமானார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in