“நெடுஞ்சாலை துறை பலகைகளில் இந்தியில் எழுதியது திணிப்பு அல்ல” - கார்த்தி சிதம்பரம் எம்.பி

காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம்

Updated on: 
1 min read

சிவகங்கை: “நெடுஞ்சாலைத் துறை ஊர் வழிகாட்டி பலகைகளில் இந்தியில் எழுதியிருப்பதை திணிப்பு என்று கூற முடியாது” என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

சிவகங்கையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “முதல்வரின் தேர்தல் பிரச்சார யுக்தியை பார்க்கும்போது, அவர் பழுத்த அரசியல்வாதியாக மாறியிருக்கிறார் என்பது தெரிகிறது. இடைத்தேர்தலில் தவெக வாக்குக்கு பணம் கொடுப்பதாக கூறும் குற்றச்சாட்டு குறித்து எனக்கு தெரியாது.

தமிழகத்தில் ஜிஎஸ்டி வருவாய் குறைந்திருப்பது, மொத்தம் வர்த்தகம், இந்திய பொருளாதார வளர்ச்சி குறைந்திருப்பதை காட்டுகிறது. தமிழகத்தில் உள்ள இண்டியா கூட்டணியில் ஒரு கட்சி வெளியேறியுள்ளது. மற்றொரு கட்சி உள்ளே வந்துள்ளது. இண்டியா கூட்டணி கூட்டத்தில் தவெக பங்கேற்பதை வரவேற்கிறேன்.

தமிழகத்தில் இந்தி திணிப்பை எதிர்க்கிறேன். அதேசமயத்தில் நெடுஞ்சாலைத் துறை ஊர் வழிகாட்டி பலகைகளில் இந்தியில் எழுதியிருப்பதை திணிப்பு என்று கூற முடியாது. வாரணாசியில் கூட தமிழில் எழுதப்பட்டுள்ளது. வழிகாட்டிப் பலகைகள் சுற்றுலாப் பயணிகளுக்கு உதவியாக இருக்க வேண்டும்.

அரசியல் மேடை, சட்டப்பேரவை கூட்டப் பேச்சில் நக்கல், நையாண்டி இருக்கிறது. உருவம் தொடர்பான பேச்சை மு.க.ஸ்டாலின் தவிர்த்திருக்கலாம். அதற்காக அந்தப் பேச்சை சர்ச்சையாக்க வேண்டாம். தனிநபரின் சொந்த வெறுப்புக்காக நடைபெறும் கொலை போன்ற குற்றங்களை எந்த அரசும் தடுக்க முடியாது. கூலிப்படையினரால் நடக்கும் கொலைகளை போலீஸார் தடுக்கலாம்.

மகளிருக்கான இலவச பேருந்து சேவை மூலம் பொது வாகனப் போக்குவரத்து பயன்படுத்துவது அதிகரிக்கும். இதன்மூலம் போக்குவரத்து நெரிசல், பெட்ரோல் பயன்பாடு குறையும். ஆளும் கட்சியினர் தங்களது கட்சி வண்ணங்களை அரசுப் பேருந்துகளில் பயன்படுத்துவது வாடிக்கைதான். இதுதான் தமிழக அரசின் இலக்கணம்” என்று அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம்</p></div>
‘ஜென் 2’ பசுமைப் பட்டாசுகள் என்றால் என்ன? - உச்ச நீதிமன்ற நிபந்தனைகளும் தாக்கமும்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in