“எஸ்ஐஆர் சதி குறித்து திருமாவளவன் ஏன் புகார் அளிக்கவில்லை?” - கராத்தே தியாகராஜன் கேள்வி

“எஸ்ஐஆர் சதி குறித்து திருமாவளவன் ஏன் புகார் அளிக்கவில்லை?” - கராத்தே தியாகராஜன் கேள்வி
Updated on: 
1 min read

சென்னை: தமிழக பாஜக மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: சென்னையில் இண்டியா கூட்டணிசார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், ‘எஸ்ஐஆர் மூலம் மு.க.ஸ்டாலின் உள்பட பல தலைவர்கள் திட்டமிட்டே தோற்கடிக்கப்பட்டனர். கொளத்தூர் தொகுதியில் ஒரு லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இந்த சதி குறித்து ஸ்டாலினிடம் தேர்தலுக்கு முன்பே தெரிவித்தேன்’ என கூறினார்.

இன்றைக்கு குற்றம் சொல்லுகிற திருமாவளவன், அப்போதே தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் இது குறித்து புகார் கொடுத்திருக்கலாம். ஆனால், கொடுக்கவில்லை. கொடுக்காமல் தடுத்தது எது? இன்றைக்கு அரசியல் சூழல் மாறிக்கொண்டிருக்கிறது. தவெக கூட்டணிக் குள் பாமக வந்து, விசிகவை முதல்வர் விஜய் புறக்கணித்து விட்டால், அப்போது நமக்கு வேறு வழியில்லை என யோசித்து, திமுகவின் ஆதரவைப் பெறுவதற்காக தவறான தகவலை திருமாவளவன் தெரிவிக்கிறார் என எண்ணத் தோன்றுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“எஸ்ஐஆர் சதி குறித்து திருமாவளவன் ஏன் புகார் அளிக்கவில்லை?” - கராத்தே தியாகராஜன் கேள்வி
சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை: பாரிமுனையில் 17.5 செ.மீ பதிவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in