

கனிமொழி எம்.பி
சென்னை: ‘இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோனாலும் முதல்வர் விஜய் வாய் திறக்கப் போவதில்லை’ என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. சாடியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “தமிழகத்தில் நேற்று மட்டும் 11 கொலைகள் நடந்துள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. தேனியில் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர், திருவள்ளூரில் ஓர் இளம்பெண், சமயபுரத்தில் இரு சிறார்கள், திருச்சியில் ஐடி ஊழியர் எனப் பல மாவட்டங்களில் உயிர்கள் பறிபோய் உள்ளன.
ஒருபுறம் மக்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருக்க, இந்த மனிதாபிமானமற்ற ஆட்சியில் மறுபுறம் உயிர்களை இழந்த குடும்பங்களில் மரண ஓலம் கேட்டுக் கொண்டிருக்கிறது.
இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோனாலும், திரைக் கவர்ச்சியால் கிடைத்த வெற்றி தந்த அகந்தையில் வாழும் முதல்வர் விஜய் வாய் திறக்கப் போவதில்லை. மக்கள் எல்லாவற்றையும் எப்போதும் சகித்துக்கொண்டே இருப்பார்கள் என்று நினைத்துவிடாதீர்கள்” என்று அந்தப் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.