“யாரையும் போலீஸ் காப்பாற்றப் போவதில்லை, பெண்களுக்கு பெப்பர் ஸ்ப்ரேயாவது கொடுங்கள்” - தவெக அரசுக்கு கனிமொழி கண்டனம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பைக் கண்டித்து, திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற கனிமொழி எம்.பி, உள்ளிட்டோர்.        படம்: எஸ்.சத்தியசீலன்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பைக் கண்டித்து, திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற கனிமொழி எம்.பி, உள்ளிட்டோர். படம்: எஸ்.சத்தியசீலன்

Updated on: 
2 min read

சென்னை: ‘‘தமி​ழ​கத்​தில் பெண்​களுக்கு எதி​ரான குற்​றங்​கள் அதி​கரித்​துள்ள நிலை​யில், காவல் துறை​யின​ரால் பெண்​களைக் காப்​பாற்ற முடி​யாது. எனவே, ரேஷன் கடைகள் வழி​யாக ஒவ்​வொரு பெண்​ணுக்​கும் ‘பெப்​பர் ஸ்ப்​ரே' வழங்க வேண்​டும். அதாவது காப்​பாற்​றட்​டும்’’என்று கனி​மொழி எம்.பி. தெரி​வித்​துள்​ளார்.

தவெக ஆட்​சி​யில் சட்​டம் ஒழுங்கு சீர்​கேடு மற்​றும் விலை​வாசி உயர்வு ஏற்​பட்​டுள்​ள​தாகக் கூறி, தமி​ழ​கம் முழு​வதும் திமுக மகளிர் அணி சார்​பில் நேற்று கண்டன ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது. சென்​னை, மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கம் அரு​கில் நடந்த ஆர்ப்​பாட்​டத்​துக்​குத் திமுக துணைப் பொதுச் செய​லா​ளர் கனிமொழி எம்​.பி. தலைமை வகித்​தார். முன்​னாள் அமைச்​சர் பி.கே.சேகர்​பாபு உள்​ளிட்ட ஏராள​மானோர் கலந்து கொண்​டனர். அப்​போது கனி​மொழி பேசி​ய​தாவது: பெண்​கள் தெரி​யாமல் தவெக​வுக்கு வாக்​களித்து விட்​டோம் என்று வருத்​தப்​படத் தொடங்கி விட்​டனர். தெரு​வில் இறங்கி போராட​வும் தொடங்கி விட்​டனர். அதனால் நிச்​ச​யம் மாற்​றம் வரும்.

ஆட்​சிப் பொறுப்​புக்கு வரு​வதற்கு முன்​னால், ‘இது நாடா? காடா?’, ‘பெண்​களுக்​குப் பாது​காப்பு இல்​லை, இதை​விட பெண்​களுக்​குப் பாது​காப்பு கொடுப்​போம்’ என்​றெல்​லாம் சொல்லி மக்​களை ஏமாற்றி ஆட்​சிப் பொறுப்​புக்கு விஜய் வந்​தார். இப்​போதுவரை 20-க்​கும் மேற்​பட்ட பெண்​களுக்கு எதி​ரான குற்​றங்​களில், வன்​முறை​களில் ஈடு​பட்​டிருப்​பது தவெகவைச் சார்ந்த நிர்​வாகி​கள்​தான். அதேபோல், அவருடைய கட்​சி​யில் இருக்​கக் கூடிய​வரே 135 கிலோ மெத்​தம்​பெட்​டமைன் போதைப் பொருளை வீட்​டில் வைத்​திருந்​தார். இவர்​கள் ஆட்​சிப் பொறுப்​புக்கு வந்த பிறகு 700 கொடூரக் குற்​றங்​கள், பெண்​களுக்கு எதி​ரான வன்​முறை​கள் 400 நடந்​துள்​ளன. இது​தான் பாது​காப்​பான தமி​ழ​கத்தை உரு​வாக்​கக் கூடிய லட்​சண​மா?

இது​வரை 50-க்​கும் மேற்​பட்ட கைதி​கள் தப்​பிச் சென்​றிருக்​கின்​ற​னர். இப்​போது சிறைச்​சாலை எப்​படி ஆகி​விட்​டது என்​றால், நீங்​கள் உள்ளே போகலாம், நினைத்​தால் வெளியே வந்​து​விடலாம். இது​தான் இன்று சட்​டம் ஒழுங்கு இருக்​கும் நிலை. குழந்​தைகளுக்​குக் கூடப் பாது​காப்பு தர முடி​யாமல் துப்​பற்ற ஆட்​சி நடந்து வருகிறது. இந்த ஆட்சிக்கு விரை​வில் நாம் ஒரு முடிவு கண்​டாக வேண்​டும்.

விலைவாசி உயர்வு: அத்தியாவசியப் பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்து விட்டது. அரிசி வாங்க முடிய​வில்​லை. ரேஷன் கடை​யில் சன்​னரக அரிசி எனக் கூறி, இருக்​கிற அரிசி​யைப் பாலிஷ் செய்து ஏமாற்​றுகி​றார்​கள். குழந்​தைகளுக்கு நீங்​கள் மோதிரம் போட வேண்​டாம். அந்​தக் குழந்​தைகளைப் பாது​காப்​பாக வைத்​துக் கொள்​ளுங்​கள். உங்​களு​டைய போலீஸோ, உங்​கள் படையோ வந்து யாரை​யும் காப்​பாற்​றப் போவ​தில்​லை. அதனால், எங்​களு​டைய சகோ​தரி​கள் ஒவ்​வொரு​வர் கையிலும் ரேஷன் கடைகள் வழி​யாகப் ‘பெப்​பர் ஸ்ப்​ரே’யை​யா​வது கொடுங்​கள். இந்​தத் துப்​பில்​லாத, வக்​கில்​லாதஆட்​சி​யில்​ அது​வாவது எங்​களைக்​ காப்​பாற்​றட்​டும்​.இவ்​வாறு அவர் பேசி​னார்​.

தவெக ஆட்சி மீது பெண்கள் கடும் கோபம்: மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ்தளப் பதிவில், "பெண்கள், தங்கள் வீடுகளின் மின் கட்டண ரசீதையும், மளிகை கட்டண ரசீதையும் பார்த்து, இந்த ஆட்சி மீது கடும் கோபத்தில் உள்ளனர். விலைவாசி ஏற்றத்தால் ஏழை மக்கள் விக்கித்து நிற்கிறார்கள். போதாக்குறைக்கு, பெண்களுக்கு எதிரான குற்றங்களும் நாளுக்குநாள் பெருகி வருகின்றன. தங்கள் வீட்டுப் பிள்ளைகளை வீட்டுக்கு வெளியே விளையாட விடவே அச்சப்படும் அளவுக்குச்சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயுள்ளதையும் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

விமர்சனம் செய்வோரை வேட்டையாடுவதிலும், இடைத்தேர்தல் நடக்கவுள்ள தொகுதிகளில் ஷோ காட்டுவதிலும் முதல்வருக்கு இருக்கும் கவனம், ஆட்சி நிர்வாகத்திலும் இருக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை மணியைத் தமிழகப் பெண்கள் அடித்துவிட்டனர்" என தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பைக் கண்டித்து, திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற கனிமொழி எம்.பி, உள்ளிட்டோர்.        படம்: எஸ்.சத்தியசீலன்</p></div>
முதல்வர் விஜய் நவ.14-ல் அம்பாசமுத்திரம் பயணம்? - சூடுபிடிக்கிறது இடைத்தேர்தல் களம்

X