கண்டிகை மாணவி விவகாரம்: குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

பிரதிநிதித்துவப் படம்

பிரதிநிதித்துவப் படம்

Updated on: 
1 min read

வண்டலூர்: கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவி பாலியல் துன்புறுத்தல் புகார் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தி, கண்டிகை பேருந்து நிலையத்தில் சிபிஐஎம்எல் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்துக்கு நீதி வழங்க வேண்டும், சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சிபிஐஎம்எல் மாவட்டச் செயலாளர் சொ.இரணியப்பன் தலைமை வகித்தார்.

கண்டிகை அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவி தொடர்பாக பாலியல் துன்புறுத்தல் புகார் எழுந்ததைத் எழுந்ததைத் தொடர்ந்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவிக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், சாட்சிகளிடம் விசாரணை செய்யப்பட்டுவருவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

புகாரில் கூறப்பட்ட சம்பவம் பள்ளிக்குள் நடைபெற்றதை உறுதிப்படுத்தும் ஆதாரம் இதுவரை கிடைக்கவில்லை என்றும், விசாரணை தொடர்ந்து வருவதாகவும் போலீஸார் கூறியுள்ளனர். இதில் சிபிஐஎம்எல் மாநிலக் குழு உறுப்பினர்கள் எ.கோபால், உ.அதியமான், எஸ்.இ ராஜகுரு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் மு.தினேஷ்குமார், கி.பத்மநாபன், கே.ஜெயசீலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

<div class="paragraphs"><p>பிரதிநிதித்துவப் படம்</p></div>
பழவேற்காடு ஏரியில் மீன்பிடிப்பது தொடர்பாக தமிழக, ஆந்திர மீனவர்களுடன் ஆலோசனை கூட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in