பழவேற்காடு ஏரியில் மீன்பிடிப்பது தொடர்பாக தமிழக, ஆந்திர மீனவர்களுடன் ஆலோசனை கூட்டம்

பழவேற்காடு ஏரியில் மீன்பிடிப்பது தொடர்பாக தமிழக, ஆந்திர மீனவர்களுடன் ஆலோசனை கூட்டம்
Updated on: 
2 min read

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில், பழவேற்காடு ஏரியில் மீன்பிடிப்பது தொடர்பாக நேற்று தமிழக, ஆந்திரா மீனவர்களுடனான கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், ஏரியில் ஜிபிஎஸ் பொருத்தி எல்லைகளை அமைக்க வேண்டும் என, மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் கோரிக்கை வைத்தனர்.

தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள பழவேற்காடு ஏரி, இந்தியாவின் 2-வது பெரிய உப்பு நீர் ஏரியாகும், 60 கி.மீ., நீளம், 17.5 கி.மீ., அகலம் கொண்ட இந்த ஏரியில் பல ஆண்டுகளாக தமிழக- ஆந்திர மீனவர்கள் சுமூகமாக மீன்பிடி தொழிலை செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திரா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களுக்கிடையே மீன்பிடி எல்லை தொடர்பாக பிரச்சனை உருவானது.

அப்போது முதல் இரு மாநில மீனவர்களுக்கிடையே அவ்வப்போது மீன்பிடிப்பது தொடர்பாக தகராறு ஏற்படுவதும், இரு மாநிலங்களின் அரசு அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதும் வழக்கமாக உள்ளது. இந்நிலையில், பழவேற்காடு ஏரியில் மீன்பிடிப்பது தொடர்பாக தமிழக, ஆந்திரா மாநிலங்களின் மீனவர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் நேற்று திருவள்ளூர் மாவட் டம், கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா தலைமையிலும், திருப்பதி மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஆர்.கோவிந்தராவ் முன்னிலையிலும் நடைபெற்றது.

இதில், பொன்னேரி, சூலூர்பேட்டை எம்எல்ஏக்கள் எம்.எஸ்.ரவி, நெலவள விஜயஸ்ரீ மற்றும் கோட்டாட்சியர்கள் முருகவேல் (பொறுப்பு), தேவேந்திரரெட்டி, மாவட்ட வன அலுவலர் சீனிவாச ரெட்டி, திருவள்ளூர் ஏடிஎஸ்பி ஜூலியஸ் சீசர், ஆந்திர மாநில டிஎஸ்பி சென்சு பாபு, தமிழக மீன்வளத்துறை இணை இயக்குநர் இளங்கோ, உதவி இயக்குநர் ஜனார்த்தனன், ஆந்திர மாநில மீன்வளத் துறை துணை இயக்குநர் நாகைய்யா உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் தமிழக, ஆந்திர மாநிலங்களின் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் இரு மாநிலங்களின் 25-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்ததாவது: பழவேற்காடு ஏரியில் மீன் பிடிக்க தற்போது பாடுமுறை பின்பற்றப்பட்டு வரும் நிலை யில், ஏரியின் மீன் பிடிப்பு பகு தியில் இரு மாநில மீனவர்கள் எங்கு வேண்டுமானாலும் மீன் பிடிக்கும் வகையில் திறந்த முறைக்கு மாற்றவேண்டும்.

ஜிபிஎஸ் பொருத்துதல்: அவ்வாறு செய்ய முடி யாத பட்சத்தில் ஆந்திராவுக் கும் தமிழகத்துக்குமான எல் லைகளை சரியாக நிர்ணயம் செய்யவேண்டும். மீன் பிடிக்கப் போகும்போது இரு மாநிலங் களுக்கான எல்லைகள் தெரி யாததால், எல்லை மாறி செல் லும் நிலை உள்ளது.

அப்போது இரு மாநில மீனவர்களுக்கிடையே பிரச் சினைகள் எழுகின்றன. முன்பு பனை மரங்கள் நட்டு எல்லைகள் பிரிக்கப்பட்டது. அதை மாற்றி நவீன தொழில்நுட்பங்களை கொண்டு ஜிபிஎஸ் பொருத்தி எல்லைகளை அமைத்துக் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பிரதிநிதிகளின் கருத்து: இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா பேசுகையில், "இரு மாநில மீனவ சங்கங்களின் பிரதிநி திகளின் கருத்துக்கள், இரு மாநில அரசுகளின் தலைமையிடங்களுக்கு எடுத்துச் சென்று, உரிய தீர்வு காணப்படும். அது வரை, பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பதில் ஏற்கெனவே இருக்கிற நடைமுறைகள் பின்பற்றப்படும்” என்றார்.

பழவேற்காடு ஏரியில் மீன்பிடிப்பது தொடர்பாக தமிழக, ஆந்திர மீனவர்களுடன் ஆலோசனை கூட்டம்
ரயிலில் தவறவிட்ட 5 பவுன், ரூ.43 ஆயிரம் மீட்பு: முதியவரின் நேர்மைக்கு பெண் பயணி நன்றி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in