

கே.எம். காதர் மொகிதீன் | கோப்புப் படம்
சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, மக்களின் எதிர்பார்ப்புகளையும் தேவைகளையும் உணர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகிறது. தற்போது நடைபெறவுள்ள மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல், இந்த நல்லாட்சிக்கு மக்கள் அளிக்கும் ஆதரவை வெளிப்படுத்தும் ஜனநாயக வாய்ப்பாகும்.
மதச்சார்பற்ற சமூகநீதிக் கூட்டணி தலைவர்களும், தவெக அமைச்சர்களும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இத்தேர்தலில் தவெக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்து தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை உருவாக்குவோம்.