

சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.ராஜேஸ்வரனின் நீதித்துறை பயணம் குறித்த ‘நீதித்துறையில் ஒரு விண்மீன்’ நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. முதல் பிரதியை உச்ச நீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் வெளியிட, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிஃபுல்லா பெற்றுக் கொண்டார். இதில் முன்னாள் நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பா.புகழேந்தி, நூலாசிரியர் பேராசிரியர் சிவ.செல்வகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். படம்: எஸ்.சத்தியசீலன்
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.ராஜேஸ்வரனின் 44 ஆண்டுகால நீதித்துறை பயணம் குறித்து பேராசிரியர் சிவ.செல்வகுமார் எழுதிய ‘நீதித் துறையில் ஒரு விண்மீ்ன்’ என்ற நூல் வெளியீட்டு விழாநேற்று நடந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் வெளியிட, முதல் பிரதியை உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிஃபுல்லா பெற்றுக்கொண்டார்.
தமிழக தமிழறிஞர் பேரவையின் பொதுச் செயலாளரும், நூல் ஆசிரியருமான சிவ.செல்வகுமார் வரவேற்றார். நிகழ்வில் பங்கேற்றவர்கள் பேசியதாவது: உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார்: இங்கு திரளாக கூடியுள்ள நட்புவட்டமாகிய நீங்கள்தான் நீதிபதி ராஜேஸ்வரன் சேர்த்து வைத்துள்ள பெரும் சொத்து. தனது அன்பு, பாசம், நேர்மை, கண்ணியத்தால் உங்களை இங்கு வரவழைத்துள்ள அவர், நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வைக்கு சொந்தக்காரர்.
நீதிபதி பா.புகழேந்தி: நீதிபதி ராஜேஸ்வரன் வழக்கறிஞராகப் பணியாற்றியபோது அவரது ஜூனியராக சேர்ந்து இன்று நீதிபதியாக உயர்ந்துள்ளேன். அர்ப்
பணிப்பு, கடின உழைப்பு, எதையும் சரியாக, முழுமையாக செய்ய வேண்டும் என்பதை அவரிடம்தான் கற்றேன். நான் இளம் வழக்கறிஞராக குடும்பத்துடன் சிந்தாதிரிப்பேட்டையில் வசித்தபோது உடல்நிலை மோசமாகி உயிருக்குப் போராடிய என்னை தோளில் தூக்கிப்போட்டு மருத்துவமனையில் சேர்த்து உயிர் கொடுத்தவர்.
இக்கட்டான சூழலில் எனது தந்தையின் உயிரையும் காப்பாற்றி அதன்பிறகு 30 ஆண்டுகள் உயிர்வாழ காரணமாக இருந்தவர் நீதிபதி ராஜேஸ்வரன். சொல்லப்போனால் இந்த நூலை நான்தான் எழுதியிருக்க வேண்டும்.
உச்ச நீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன்: வரலாறுகளைப் பதிவு செய்ய மறந்துபோன நமது தமிழ் கலாச்சாரம்,நல்ல மனிதர்களை சமூகத்துக்கு அடையாளம் காட்டும்இதுபோன்ற நூல்கள் மூலம்தன்னை உயிர்ப்பித்துக்கொள் கிறது. மனித ரூபத்தில் அன்பு,கருணையைப் பரிமாறுவது இறையின் ரூபம். அந்த வகையில், நட்பை மதித்து, சக மனிதரை நேசித்து சிறந்த மனிதராக வாழ்ந்து வரும் முன்னாள் நீதிபதி ராஜேஸ்வரன் நீதித் துறையில் ஒரு விண்மீன் என் றால் - அது மிகையல்ல. இவ்வாறு அவர்கள் பேசினர்.
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி செ.ராஜேந்திரன், முன்னாள் டிஜிபி கி.விஜயகுமார், முன்னாள் நீதிபதிகள் பால் வசந்த குமார், ஏ.குலசேகரன், கே.என்.பாஷா, என்.கிருபாகரன், எஸ்.வைத்தியநாதன், ரோட்டரி ஆளுநர் ஸ்ரீராம் துவ்ரி, தஞ்சாவூர் தொன்மை கட்டிடக்கலை வல்லுநர் சு.ராஜேந்திரன், மா.சமிதா உள்ளிட்டோரும் பேசினர். நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் ஏற்புரை நிகழ்த்த, ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான அவரது மனைவி புவனா ராஜேஸ்வரன் நன்றி கூறினார்.