பணியில் இருக்கும் போக்குவரத்து போலீஸார் செல்போன் பயன்படுத்த அனுமதிக்க கூடாது: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவுறுத்தல்

பணியில் இருக்கும் போக்குவரத்து போலீஸார் செல்போன் பயன்படுத்த அனுமதிக்க கூடாது: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: பணி​யில் இருக்​கும்​போது போக்​கு​வரத்து போலீ​ஸார் செல்​போன் பயன்​படுத்த அனு​ம​திக்​கக்​கூ​டாது என தமிழக டிஜிபிக்​கும், சென்னை மாநகர காவல் ஆணை​யருக்​கும் உயர் நீதி​மன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்​கடேஷ் அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு சென்னை காம​ராஜர் சாலை​யில் சிக்​னலில் பெண் ஒரு​வர் மீது கார் மோதி விபத்து ஏற்​பட்​டது. உயர் நீதி​மன்​றத்​துக்கு வரும் வழி​யில் இந்த விபத்​தைக் கண்ட சென்னை உயர் நீதி​மன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்​கடேஷ். போக்குவரத்து பணி​யில் உள்ள போலீ​ஸார் செல்​போனில் பேசுவ​தி​லும், பாட்டு கேட்​ப​தி​லும், வீடியோக்​கள் பார்ப்​ப​தி​லும் தீவிரம் காட்​டு​வ​தால் தான் இது​போன்ற விபத்​துகள் நேரிடு​வ​தாக கருத்து தெரி​வித்​திருந்​தார்.

பணி​யில் இருக்​கும்​போது போக்​கு​வரத்து போலீ​ஸார் செல்​போன் பயன்​படுத்​தக் கூடாது என சுற்​றறிக்கை பிறப்​பிக்க வேண்​டுமென​வும் தமிழக டிஜிபிக்​கும், சென்னை மாநகர காவல் ஆணை​யருக்​கும் உத்​தரவு பிறப்​பித்​திருந்​தார்.

இந்​நிலை​யில் தன்​பாலின சேர்க்​கை​யாளர்​களின் உரிமை​கள் தொடர்​பான வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்​கடேஷ் முன்​பாக நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது நீதிப​தி, போக்​கு​வரத்து போலீ​ஸார் பணி​யின் போது செல்​போன் பயன்​படுத்​தக் கூடாது என அதி​காரி​கள் சுற்​றறிக்கை பிறப்​பித்​தா​லும், சென்​னை​யில் உள்ள போக்​கு​வரத்து போலீ​ஸார் நெரிசல் மிகுந்த நேரங்​களி​லும் டிராபிக் சிக்​னலின் ஒரு ஓரத்​தில் உட்​கார்ந்​து​கொண்டு செல்​போனில் மணிக்​கணக்​கில் பேசிக்​கொண்டு இருக்​கின்​றனர்.

இல்​லை​யெனில் செல்​போனில் வீடியோ பார்க்​கின்​றனர். இதை இன்று கூட நான் நீதி​மன்​றத்​துக்கு வரும் வழி​யில் பார்த்​தேன். பணி​யின்​போது இது​போல செயல்​படக்​கூ​டாது என போக்​கு​வரத்து போலீ​ஸாரிடம் விழிப்​புணர்வு இருப்​பது இல்லை என அதிருப்தி தெரி​வித்​தார்.

பின்​னர், “போக்​கு​வரத்து போலீ​ஸார் இது​போல பணி​யின்​போது செல்​போன் பயன்​படுத்த அனு​ம​திக்​கக்​கூ​டாது. இதுதொடர்​பாக தமிழக டிஜிபி​யும், சென்னை மாநகர காவல் ஆணை​யரும் கண்​டிப்​பான உத்​தர​வு​களை பிறப்​பிக்​க வேண்​டும்​” என அறி​வுறுத்​தி​யுள்​ளார்​

பணியில் இருக்கும் போக்குவரத்து போலீஸார் செல்போன் பயன்படுத்த அனுமதிக்க கூடாது: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவுறுத்தல்
விமானப் படை தேர்வில் ஆள்மாறாட்டம்: ஆவடியில் ஹரியானா இளைஞர்கள் 4 பேர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in