கட்சிகளின் ரோடு-ஷோ, பொதுக்கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறை கோரிய வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு

கட்சிகளின் ரோடு-ஷோ, பொதுக்கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறை கோரிய வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு
Updated on
1 min read

சென்னை: அரசி​யல் கட்​சிகளின் ரோடு-ஷோக்​கள், பொதுக்​கூட்​டங்​களுக்கு நிலை​யான வழி​காட்டு நெறி​முறை​களை உரு​வாக்​கக்​கோரிய வழக்​கி்ன் தீர்ப்பை உயர் நீதி​மன்​றம் தேதி குறிப்​பி​டா​மல் தள்ளி வைத்​துள்​ளது.

கரூரில் கடந்த செப்​.27 அன்று தவெக தலை​வர் விஜய் பங்​கேற்ற பிர​சா​ரக் கூட்​டத்​தில் ஏற்​பட்ட நெரிசலி்ல் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். அதையடுத்து அரசி​யல் கட்​சிகளின் ரோடு- ஷோக்​கள், பொதுக்​கூட்​டங்​களுக்கு நிலை​யான வழி​காட்டு நெறி​முறை​களை உரு​வாக்​கக்​கோரி தவெக, அதி​முக மற்​றும் தேசிய மக்​கள் சக்தி கட்சி சார்​பில் பொதுநல மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன.

இந்த வழக்கு விசா​ரணை​யின்​போது தமிழக அரசு சார்​பில் வரைவு வழி​காட்டு நெறி​முறை​கள் வகுக்​கப்​பட்டு உயர் நீதி​மன்றத்​தில் தாக்​கல் செய்​யப்​பட்​ டது. இதன்​மீது கருத்து தெரிவிக்க தவெக, அதி​முக உள்​ளிட்ட மனு​தா​ரர்​களுக்கு நீதிப​தி​கள் உத்​தர​விட்​டிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்​தவா மற்​றும் நீதிபதி ஜி.அருள்​முரு​கன் முன்பாக நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது தவெக, அதி​முக மற்​றும் தேசிய மக்​கள் சக்தி கட்சி சார்​பில் பரிந்துரைகள், கருத்​துகள் சமர்ப்​பிக்​கப்​பட்​டன. இவை​யும் பரிசீலனைக்கு எடுத்​துக் கொள்​ளப்​படும் என தமிழக அரசு தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது. அதையடுத்து நீதிப​தி​கள், இந்த வழக்​கின் தீர்ப்பை தேதி குறிப்​பி​டா​மல் தள்​ளி​வைத்​தனர்.

தவெக பதில் மனு: இந்த வழக்​கில் தவெக தாக்கல் செய்த பதில் மனு​வில் கூறியிருப்​ப​தாவது: அரசி​யல் கட்​சிகளின் பொதுக்​கூட்​டம் போன்ற நிகழ்​வு​களுக்கு வருகை தரும் கர்ப்​பிணி​கள், குழந்​தைகள், மூத்த குடிமக்​களை பாது​காக்​கும் பொறுப்பை நிகழ்ச்சி ஏற்​பாட்​டாளர்​களே ஏற்க வேண்​டும் என்​றாலும், சட்​டம் - ஒழுங்கு என வரும்​போது அவர்​களை பாதுகாக்​கும் முதன்மை பொறுப்பு போலீ​ஸாருக்​கும், அரசுக்​கும்​தான் உள்​ளது. இந்த விச​யத்​தில் அரசும், போலீஸாரும் தங்​கள் பொறுப்​பை​ தட்​டிக்​கழிக்க முடி​யாது.

கட்சி பாகு​பாடும் பார்க்​காமல் நிகழ்​வு​களுக்கு அனுமதி வழங்க வேண்டும். தன்​னார்வலர்களை பணி​யமர்த்​தி​னாலும் போலீ​ஸாரும் தகுந்த பாது​காப்பு வழங்க வேண்​டும். 2 மணி நேரத்​துக்கு முன்​பாக கூட்​டம் கூடக்​கூ​டாது என்​பது ஏற்​புடையதல்ல. சுய​விருப்​பம் அடிப்​படை​யில் கூடும் கூட்​டத்துக்கு நிகழ்ச்சி ஏற்​பாட்​டாளர்​களை பொறுப் பாளி​யாக்​கக் கூடாது. கூட்​டத்துக்கு வெளியே நடக்கும், குறிப்பாக பயணங்​களின்​போது நடை​பெறும் அசம்பா​வித நிகழ்​வு​களுக்​கும் சம்​பந்​தப்​பட்ட அரசி​யல் கட்​சிகள் மீது பழி சுமத்​தக் கூடாது. இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

கட்சிகளின் ரோடு-ஷோ, பொதுக்கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறை கோரிய வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு
இசை பல்கலைக்​கழக மானியம் ரூ.5 கோடியாக உயர்த்தப்படும்: பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in