விளாத்திகுளம் மாணவி கொலை​ வழக்கு: சரியான முறையில் விசாரணை நடப்பதாக நீதிபதிகள் கருத்து

விளாத்திகுளம் மாணவி கொலை​ வழக்கு: சரியான முறையில் விசாரணை நடப்பதாக நீதிபதிகள் கருத்து
Updated on
2 min read

மதுரை: விளாத்​தி​குளம் பள்ளி மாணவி கொலை வழக்​கில் 5 பேரிடம் மரபணுச் சோதனை நடத்த முடிவு செய்​யப்​பட்டு அவர்​களின் ரத்த மாதிரி சேகரிக்​கப்​பட்டு ஆய்​வகத்​துக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டுள்​ள​தாக உயர் நீதி​மன்​றத்​தில் அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த விசா​ரணை சரி​யான முறை​யில் நடப்​ப​தாக நீதிப​தி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

தூத்​துக்​குடியைச் சேர்ந்த மனுதாரர் மாரீஸ்​வரி உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில், விளாத்​தி​குளம் அருகே பிளஸ் 2 மாணவி பாலியல் பலாத்​காரம் செய்து கொலை செய்​யப்​பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்​தர​விடுமாறு கோரப்​பட்​டிருந்​தது.

இந்த மனு நீதிப​தி​கள் சதீஷ்கு​மார், ஜோதி​ராமன் அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அரசுத் தரப்​பில் தெரிவிக்கப்பட்டதாவது: மாணவி வழக்​கில் சந்​தேகிக்​கப்​படும் 5 பேரிடம் டிஎன்ஏ சோதனை நடத்த ரத்த மாதிரி, சேகரிக்​கப்​பட்டு தடய​வியல் ஆய்வு மையத்​துக்கு அனுப்​பிவைக்​கப்​பட்​டுள்​ளது.

சோதனை முடிவு​கள் வர வேண்​டி​யுள்​ளது. சம்பவ நேரத்​தில் அப்​பகு​தி​யில் பதி​வான 1,600 செல்​போன் எண்​கள் சேகரிக்​கப்​பட்டு ஆய்​வுக்கு உட்​படுத்​தப்​பட்​டுள்​ளன. இந்த செல்​போன் எண்​களை சைபர் கிரைம் போலீ​ஸார் ஆய்வு செய்து வரு​கின்​றனர். 212 பேர் சாட்​சிகளாக விசா​ரிக்​கப்​பட்​டுள்​ளனர்.

சம்​பவம் நடந்த இடத்​தில் சிசிடிவி கேம​ராக்​கள் இல்​லை. சுற்​றி​யுள்ள பகு​தி​களில் 24 சிசிடிவி கேம​ராக்​களின் பதிவு​கள் சேகரிக்​கப்​பட்டு ஆய்வு செய்​யப்​படு​கிறது. எஸ்பி தலை​மை​யில் காவல் ஆய்​வாள​ரும் மற்​றும் 10 சிறப்​புப் படை​யினரும் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

இந்தப் புகாரை அலட்​சி​ய​மாகக் கையாண்டதற்காக போலீ​ஸார் மீதும் நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. மாண​வி​யின் பெற்​றோர் விசா​ரணைக்கு முழு ஒத்​துழைப்பு வழங்க வேண்​டும். இவ்வாறு கூறப்​பட்​டது.

மனு​தா​ரர் தரப்​பில் வழக்​கறிஞர் மாரீஸ்குமார் வாதிட்​ட​தாவது: மாண​வியை இரண்​டுக்​கும் மேற்​பட்​டோர் பாலியல் வன்​கொடுமை செய்​து, கொலை செய்​துள்​ளனர்.

மாணவி மாய​மானது தொடர்​பாக மார்ச் 10-ல் குளத்​தூர் காவல் நிலை​யத்​தில் புகார் அளிக்​கப்​பட்​டது. புகாரைப் பெறாமலேயே மகளிர் காவல் நிலை​யம் செல்​லு​மாறு போலீ​ஸார் கூறினர்.

அடுத்தநாள் (மார்ச் 11) குளத்​தூர் போலீ​ஸார் வழக்​குப் பதிய மறுத்​து​விட்​டனர். மாண​வி​யின் உடல் மீட்​கப்​பட்ட பிறகே வழக்கு பதிந்தனர். மாணவி வன்​கொடுமை செய்​யப்​பட்​ட​தாக ஊடகங்​களில் செய்தி வெளி​யான பிறகே போலீ​ஸார் சம்பவ இடத்​துக்கு வந்​தனர்.

குற்​ற​வாளி​களைக் கண்​டு​ பிடிக்​கக்​கோரி போராட்​டம் நடத்​திய பிறகே எஸ்பி சம்பவ இடம்வந்​தார். மார்ச் 10-ல் வழக்​குப் பதிந்து மாண​வியைக் கண்டு​பிடிக்க நடவடிக்கை எடுத்​திருந்தால் கொலை​யைத் தடுத்திருக்​கலாம்.

சிபிஐ விசா​ரணை கோரி நீதி​மன்​றம் செல்​லக்​ கூடாது என மாண​வி​யின் குடும்​பத்​தினரை போலீ​ஸார் அச்​சுறுத்​தினர். இவ்​வாறு அவர் வாதிடப்​பட்​டார். பின்​னர் நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: விசா​ரணை சரி​யான முறை​யில் நடை​பெற்று வரு​கிறது.

உடனடி​யாக குற்​ற​வாளி​களைக் கைது செய்ய வேண்​டும் என சாலை மறியல் போராட்​டம் நடத்​து​வது, சமூக ஊடகங்​கள் வழி​யாக​வும், அரசி​யல் கட்​சி​யினர், அமைப்​பு​கள் சார்​பிலும் அழுத்​தம் கொடுப்​பது விசா​ரணை​யைப் பாதிக்​கும்.

அழுத்​தம் கொடுப்​ப​தால் மட்​டும் ஒரு வழக்​கில் உண்​மை​யான குற்​ற​வாளி​களைக் கண்​டறிய முடி​யாது. அவசரப்​படுத்​து​வது உண்​மை​யான குற்​ற​வாளி​களுக்​குச் சாதக​மாக அமை​யும். சம்​பவம் தொடர்​பாக காவல் ஆய்​வாளர் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளார்.

இது​போது​மான தண்​டனை அல்ல. மாண​வி​யின் பெற்​றோர் அளித்த புகார் தொடர்பாக உடனடி​யாக நடவடிக்கை எடுக்​காத காவல்​துறை​யினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்​டும். மாண​வி​யின் பெற்றோர் போலீஸ் விசா​ரணைக்கு ஒத்துழைக்க வேண்​டும்.

பாதிக்​கப்​பட்ட மாண​வி​யின் பெற்​றோரிடம் விசா​ரணை நடத்தி வாக்​குமூலத்தை வீடியோ​வில் பதிவு செய்ய வேண்​டும். அறி​வியல்​பூர்​வ​மாக விசா​ரணை நடை​பெறும்.

விசா​ரணை​யில் ஏற்​பட்​டுள்ள முன்​னேற்​றம் குறித்து அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும். விசா​ரணை ஏப்​.2-ம் தேதிக்கு தள்​ளிவைக்​கப்​படு​கிறது. இவ்​வாறு உத்​தரவிட்​டனர்​.

விளாத்திகுளம் மாணவி கொலை​ வழக்கு: சரியான முறையில் விசாரணை நடப்பதாக நீதிபதிகள் கருத்து
திருப்பரங்குன்றம் தீப வழக்கில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in