பேரறிவாளன் சட்டப்படி வழக்கறிஞராக பதிவு செய்ததில் என்ன தவறு? - நீதிபதிகள் கேள்வி

பேரறிவாளன் சட்டப்படி வழக்கறிஞராக பதிவு செய்ததில் என்ன தவறு? - நீதிபதிகள் கேள்வி
Updated on
1 min read

சென்னை: ‘பேரறிவாளன் சட்​டப்​படி தன்னை வழக்​கறிஞ​ராகப் பதிவு செய்து கொண்​ட​தில் என்ன தவறு உள்​ளது? ’ என உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்​பி​யுள்​ளது.

முன்​னாள் பிரதமர் ராஜீவ்​காந்தி கொலை வழக்​கில் கைதாகி 30 ஆண்​டு​களுக்​கும் மேலாக சிறை தண்​டனையை அனுப​வித்த பேரறி​வாளன், கடந்த 2022-ம் ஆண்டு உச்ச நீதிமன்​றத்​தால் விடுவிக்​கப்​பட்​டார்.

இந்​நிலை​யில் அவர் சட்​டப்​படிப்பு படித்​து, கடந்த ஏப்​.24 அன்று தமிழ்​நாடு மற்​றும் புதுச்​சேரி பார் கவுன்​சிலில் தன்னை வழக்​கறிஞ​ராகப் பதிவு செய்து கொண்டார்.

இந்​நிலை​யில், பேரறி​வாளனை வழக்​கறிஞ​ராக பதிவு செய்​ததை எதிர்த்து காங்​கிரஸ் எம்​பி ஆர்​.சு​தா, சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

அதில், பேரறி​வாளன் கருணை அடிப்​படை​யில் உச்ச நீதி​மன்​றத்​தால் விடுவிக்​கப்​பட்​டுள்​ளாரேயன்​றி, குற்​ற​வாளி இல்லை என கூறப்படவில்லை.

மேலும், குற்ற வழக்​கு​களில் சிறை தண்​டனையை அனுபவிக்​கும் குற்​ற​வாளி​கள் விடு​தலை​யான 2 ஆண்​டு​களுக்​குப் பிறகு வழக்​கறிஞ​ராக தங்​களைப் பதிவுசெய்து கொள்ள அனு​ம​திக்​கும் வழக்​கறிஞர் சட்​டப்​பிரிவை​யும் சட்​ட​விரோத​மானது என அறி​வித்து அதை ரத்து செய்ய வேண்​டும். பேரறி​வாளனை வழக்​கறிஞ​ராகப் பதிவு செய்​தது தொடர்​பாக சிபிஐ விசா​ரணைக்​கு உத்​தர​விட வேண்​டும் என கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜி.அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது நீதிப​தி​கள், குற்ற வழக்​கில் சிறை தண்​டனை அனுப​வித்து விடு​தலை ஆன 2 ஆண்​டு​களுக்​குப் பிறகு வழக்​கறிஞ​ராகப் பதிவு செய்து கொள்​ளலாம் என வழக்​கறிஞர்​கள் சட்​டம் அனு​ம​திக்​கும்​போது, பேரறி​வாளன் தன்னை வழக்​கறிஞ​ராகப் பதிவு செய்து கொண்​ட​தில் என்ன தவறு என கேள்வி எழுப்​பினர்.

பின்​னர் இந்த வழக்​கில் சிபிஐ விசா​ரணை கோரு​வது ஏற்​புடையதல்ல என்​ப​தால், வழக்​கில் இருந்து சிபிஐ-யை நீக்க மனு​தா​ரருக்கு உத்​தர​விட்​டனர். அத்​துடன் இந்த வழக்​கில் அகில இந்​திய பார் கவுன்​சில் மற்​றும் தமிழ்​நாடு பார் கவுன்​சில் உள்​ளிட்​டோர் பதிலளிக்க 4 வார காலம் அவகாசம்​ வழங்​கி வி​சா​ரணை​யை தள்​ளி​வைத்​துள்​ளனர்​.

பேரறிவாளன் சட்டப்படி வழக்கறிஞராக பதிவு செய்ததில் என்ன தவறு? - நீதிபதிகள் கேள்வி
லாட்டரி அதிபர் மார்ட்டின் மற்றும் குடும்பத்தினரின் ரூ.457 கோடி சொத்து முடக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in