லாட்டரி அதிபர் மார்ட்டின் மற்றும் குடும்பத்தினரின் ரூ.457 கோடி சொத்து முடக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு

அமலாக்கத் துறை 6 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு
லாட்டரி அதிபர் மார்ட்டின் மற்றும் குடும்பத்தினரின் ரூ.457 கோடி சொத்து முடக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு
Updated on
1 min read

சென்னை: லாட்​டரி அதிபர் மார்ட்​டின் மற்​றும் அவரது குடும்ப உறுப்​பினர்​களுக்கு சொந்​த​மான சுமார் ரூ.457 கோடி மதிப்​பிலான சொத்​துகள் முடக்​கப்​பட்​டதை எதிர்த்து தொடரப்​பட்ட வழக்​கில், இதுதொடர்​பாக அமலாக்​கத்​துறை ஆறு வார காலத்​தில் பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

கடந்த 2009 – 2010 கால​கட்​டத்​தில் சட்ட விதி​களுக்கு புறம்​பாக சிக்​கிம் மாநில லாட்​டரியை விற்​பனை செய்​ததன் மூலம், சிக்​கிம் மாநில அரசுக்கு ரூ. 910 கோடி இழப்பு ஏற்​படுத்​தி​ய​தாக லாட்​டரி அதிபர் மார்ட்​டின் மற்​றும் தனி​யார் நிறு​வனங்​களுக்கு எதி​ராக சிபிஐ வழக்​குப்​ப​திவு செய்​தது.

கேரள நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்ள இந்த வழக்​கின் அடிப்​படை​யில், அமலாக்​கத் துறை​யும் இதுதொடர்​பாக வழக்​குப்​ப​திவு செய்து மார்ட்​டின், அவரது மனை​வி​யும் அதி​முக எம்​எல்​ஏ-வு​மான லீமா ரோஸ், இவர்​களது மகளும், தமிழக பொதுப்​பணித்​துறை அமைச்​சர் ஆதவ் அர்​ஜூ​னா​வின் மனை​வி​யு​மான டெய்ஸி ஆதவ் அர்​ஜூனா உள்​ளிட்ட பலரது வீடு​களில் சோதனை நடத்​தி​யது.

பின்​னர் அமலாக்​கத் துறை மார்ட்​டின் மற்​றும் அவரது குடும்ப உறுப்​பினர்​களுக்கு சொந்​த​மான ரூ.910.29 கோடி மதிப்​புள்ள சொத்துகளை முடக்​கியது.

இதில் ரூ.456.84 கோடி மதிப்​புள்ள சொத்​துகளை முடக்​கியதை உறுதி செய்து சட்​ட​விரோத பணப்​பரி​மாற்ற தடுப்​புச்​சட்ட வழக்​கு​களுக்​கான அமலாக்​கத் துறை மேல்​முறை​யீட்டு தீர்ப்​பா​யம் கடந்​தாண்டு மே மாதம் உத்​தர​விட்​டது.

தீர்ப்​பா​யத்​தின் இந்த உத்​தரவை எதிர்த்து மார்ட்​டின் மற்​றும் தனி​யார் நிறு​வனங்​கள் தரப்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​கு​கள் தொடரப்​பட்​டன.

அதில், தங்​களது சொத்து முடக்​கத்தை ரத்து செய்​து, அந்த சொத்​துகளை விடுவிக்க உத்​தர​விட வேண்​டும், எனக் கோரி​யிருந்​தனர்.

இந்த வழக்​கு​களை விசா​ரித்த தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜி.அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வு, இதுதொடர்​பாக அமலாக்​கத் துறை ஆறு வார காலத்​தில் பதிலளிக்க உத்​தர​விட்டு விசா​ரணையை தள்ளி வைத்​துள்​ளனர்.

லாட்டரி அதிபர் மார்ட்டின் மற்றும் குடும்பத்தினரின் ரூ.457 கோடி சொத்து முடக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு
மின்வெட்டு பிரச்சினையில் ஒரு சிலரின் தூண்டுதலின் பேரில் சாலைகளில் போராட்டம் நடக்கிறது: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in