மெரினாவில் ஆக்கிரமிப்பு கடைகள் மாஃபியாக்களின் கட்டுப்பாட்டில் இருந்தன: நீதிபதிகள் குற்றச்சாட்டு

மெரினாவில் ஆக்கிரமிப்பு கடைகள் மாஃபியாக்களின் கட்டுப்பாட்டில் இருந்தன: நீதிபதிகள் குற்றச்சாட்டு
Updated on
1 min read

சென்னை: உயர் நீதி​மன்​றம் தலை​யிட்டு சீரமைப்பு நடவடிக்​கைகளை எடுக்​கும் வரை மெரினாவை ஆக்​கிரமித்​திருந்த கடைகள் மாஃபி​யாக்​களின் கட்​டுப்​பாட்​டில் இருந்​த​தாக சென்னை உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் பகிரங்​க​மாக குற்​றம் சாட்​டி​யுள்​ளனர்.

சென்னை மெரினா கடற்​கரை​யில் உள்ள கடைகளை முறைப்​படுத்​து​வது தொடர்​பான வழக்கை விசா​ரித்த சென்னை உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் ஆர்​.சுரேஷ்கு​மார், ஏ.டி.ஜெகதீஷ் சந்​திரா ஆகியோர் அடங்​கிய அமர்​வு, மெரினாவில் உணவுப் பொருட்​கள், பொம்மை மற்​றும் பேன்சி கடைகள் என மொத்​தம் 300 கடைகளுக்கு மட்​டுமே அனு​மதி வழங்க வேண்​டுமென்​றும், இதற்​கான பயனாளி​களை தேர்வு செய்ய ஜம்​மு-​காஷ்மீர் உயர் நீதி​மன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிப​தி​யான என்​.​பால்​வசந்​த கு​மாரை நியமித்​தும் உத்​தர​விட்​டிருந்​தனர்.

அதன்​படி 300 பேருக்கு மெரினாவில் கடைகள் ஒதுக்​கப்​பட்​டுள்​ளன. இந்​நிலை​யில் இந்த வழக்கு நீதிப​தி​கள் ஆர்​.சுரேஷ்கு​மார், ஏ.டி.ஜெகதீஷ் சந்​திரா ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது மெரினாவில் ஏற்​கெனவே கடைகளை வைத்​திருந்த 600-க்​கும் மேற்​பட்​டோர் இந்த வழக்​கில் தங்​களை​யும் இணைக்​கக்​கோரி இடை​யீட்டு மனுக்​களை தாக்​கல் செய்​திருந்​தனர்.

அந்த மனுக்​களை விசா​ரித்த நீதிப​தி​கள், “கடற்​கரைக்கு அரு​கில் உள்ள வியா​பார மண்​டலங்​களில் மட்​டுமே கடைகள் ஒதுக்​கப்பட வேண்​டும். மெரினாவை வியா​பாரத் தலமாக மாற்ற ஒரு​போதும் அனு​ம​திக்க முடி​யாது.

கேரளா​வின் கோவளம், ஒடி​சா​வின் பூரி, மும்பை மெரைன் டிரைவ் போன்ற கடற்​கரைகளைப்​போல மெரினாவையும் அழகுபடுத்தி சுத்​த​மாக பராமரித்​தால் மட்​டுமே இந்​திய சுற்​றுலா பயணி​கள் மட்​டுமின்றி வெளி​நாட்டு சுற்​றுலாப் பயணி​களும் அதி​கள​வில் வருகை தரு​வர்.

நீதி​மன்​றம் தலை​யிடும் முன்​பாக, மெரினா கடற்​கரை முழு​மை​யாக கடைகளால் ஆக்​கிரமிக்​கப்​பட்டு சுத்​தமில்​லாமல் இருந்​தது. அந்த கடைகள் மாஃபியா கும்​பல்​களின் கட்​டுப்​பாட்​டில் இருந்​தன. கடை உரிமை​யாளர்​களை மிரட்டி மாமூல் வசூலித்து வந்த அந்த கும்​பல் நீதி​மன்ற தலை​யீடு காரண​மாக பின்​புலத்​தில் இருந்து கொண்டு சிலரைத் தூண்​டி​விடு​கிறது.

அதன் காரண​மாகவே இந்த மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளனவா என்ற சந்​தேகம் உள்​ளது. தற்​போது கடைகள் பெற்​றுள்ள 300 பேரும், யாருக்​கும், எதற்​காக​வும் பணம் கொடுக்​காமல் நேர்​மை​யான முறை​யில் கடைகளைப் பெற்​றுள்​ளனர்.

கடைகளை முறைப்​படுத்​தும் நீதி​மன்ற நடவடிக்​கைகளுக்கு எதிர்ப்பு தெரி​வித்​தால் அழகான மெரினாவை எதிர்​காலச் சந்​த​தி​யினருக்கு விட்​டுச்​செல்ல முடி​யாது.

மெரினா கடற்​கரை ஒன்​றும் வியா​பாரத் தலம் அல்ல. அங்கு கடைகள் அமைப்​பதை யாரும் உரிமை​யாக கோர முடி​யாது. அதி​காரி​களு​டன் இணைந்து நாங்​கள் நேரடி கள ஆய்வு செய்​ததன் அடிப்​படை​யில் நீலக்​கொடி மண்​டலங்​களு​டன் சர்​வ​தேச அந்​தஸ்​துக்கு தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது.

அதற்கு ஒரு​போதும் இடையூறு செய்​யக் கூடாது. இந்த இடை​யீட்டு மனுக்​கள் மீது பின்​னர் உத்​தரவு பிறப்​பிக்​கப்​படும்​'' எனக்​கூறி வி​சா​ரணை​யை தள்​ளி வைத்​துள்​ளனர்​.

மெரினாவில் ஆக்கிரமிப்பு கடைகள் மாஃபியாக்களின் கட்டுப்பாட்டில் இருந்தன: நீதிபதிகள் குற்றச்சாட்டு
வாகனத்தின் விளக்கை சேதப்படுத்தியதற்காக மன்னிப்பு கடிதத்துடன் ரூ.200 வைத்துச் சென்ற நபரால் நெகிழ்ச்சி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in