காவல் மரணமாக இருந்தால் கடும் நடவடிக்கை: மானாமதுரை இளைஞர் மரண வழக்கில் நீதிபதி உறுதி

மானாமதுரை காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய வந்த மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, கோட்டாட்சியர் ஜெபிகிரேசி,  நகராட்சி ஆணையர் கோபால கிருஷ்ணன் உள்ளிட்டோர்.

மானாமதுரை காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய வந்த மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, கோட்டாட்சியர் ஜெபிகிரேசி, நகராட்சி ஆணையர் கோபால கிருஷ்ணன் உள்ளிட்டோர்.

Updated on
1 min read

மதுரை / சிவகங்கை: மானாமதுரையில் போலீ​ஸா​ரால் கைது செய்​யப்​பட்ட இளைஞர் இறந்​தது, காவல் மரண​மாக இருந்​தால் கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என உயர் நீதி​மன்​றம் தெரி​வித்​துள்​ளது.

சிவகங்கை மாவட்​டம் மானாமதுரையில் போலீ​ஸார் தாக்​கிய​தில் உயி​ரிழந்​த​தாகக் கூறப்​படும் ஆகாஷ் டெல்​சனின் தந்தை ராஜேஷ்கண்​ணன் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்கல் செய்த மனுவில் சிபிசிஐடி விசா​ரணை, உரிய இழப்​பீடு, உடற்​ கூறாய்வு வீடியோ பதிவு உள்பட பல்​வேறு கோரிக்​கைகளை வலியுறுத்தியிருந்​தார்.

இந்த மனுவை விசா​ரித்த நீதிப​தி, உடற்கூறாய்வை வீடியோ​வில் பதிவு செய்​ய​வும் ஆகாஷின் உறவினர் நடத்தி வரும் சாலை மறியலை கைவிட​வும் உத்​தர​விட்​டார்.

இந்​நிலை​யில் நீதிபதி எல்​.விக்​டோரியா கெளரி முன் அரசு வழக்​கறிஞர் ஆஜராகி, தேசிய நெடுஞ் ​சாலை​யில் நடந்துவரும் மறியல் போராட்​டத்​தைக் கைவிட நீதி​மன்​றம் உத்​தர​விட்​டும் போராட்​டம் தொடர்​கிறது. இதனால் மக்கள் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர்.

அவர்களை உடனே கலைந்து செல்ல நீதி​மன்​றம் உத்​தர​விட கோரினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிப​தி, இன்​னும் ​மக்​களைச் சிரமப்​படுத்​தும் வகை​யில் ஏன் மறியல் போராட்​டத்தை நடத்​துகிறீர்​கள் எனக் கேள்வி எழுப்​பி​னார். அதற்கு அரசி​யல் கட்​சிகளே போராட்​டத்​தில் ஈடு​பட்​டுள்​ளதாக் கூறப்​பட்​டது.

பின்​னர் நீதிப​தி, இதனை வைத்து அரசி​யல் செய்ய நேரமில்​லை. ஒரு​வேளை அது காவல் மரண​மாக இருந்​தால் நீதி​மன்​றம் உரிய நடவடிக்கை எடுக்​கும். ஆகாஷின் பெற்​றோர் ஊடகங்​கள் வாயி​லாகப் போராட்​டத்​தில் ஈடு​பட்​டுள்​ளோரைக் கலைந்து செல்ல அறி​வுறுத்த வேண்​டும். விசா​ரணை நாளை தள்​ளிவைக்​கப்​படு​கிறது என்றார்.

சிசிடிவி காட்சிகள் ஆய்வு

இதனிடையே இந்த விவாகரம் தொடர்பாக நேற்று மானாமதுரை காவல் நிலை​யத்தில் சிபிசிஐடி எஸ்பி ஷாஜி​தா, ஆய்​வாளர்​கள் சரவணன், கீதா ஆகியோர் விசா​ரணை நடத்​தினர்.

அதே​போல், மதுரை குற்​றவியல் நீதித்​துறை நடு​வர் ஹரிஹர சுதனும் ஆகாஷ்டெல்​சனை கைது செய்த போலீ​ஸாரிட​ம் விசா​ரணை நடத்​தினார்.

உயர் நீதி​மன்ற உத்​தர​வின்​ பேரில் காவல் நிலை​ய சிசிடிவி கேமரா பதிவு​களை ஆய்வு செய்து பாது​காக்க, மாவட்ட வரு​வாய் அலு​வலர் செல்​வசுரபி, மானாமதுரை நகராட்சி ஆணை​யர் கோபால​கிருஷ்ணன் உள்​ளிட்ட அதி​காரி​கள் குழுவினரும் காவல் நிலை​யத்​தில் ஆய்வு செய்​தனர். மேலும் தேசிய தகவல் மைய அதி​காரி​கள் சிசிடிவி காட்​சிகளை தனியாக பதிவு செய்து எடுத்​துச் சென்​றனர்.

<div class="paragraphs"><p>மானாமதுரை காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய வந்த மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, கோட்டாட்சியர் ஜெபிகிரேசி,  நகராட்சி ஆணையர் கோபால கிருஷ்ணன் உள்ளிட்டோர்.</p></div>
ரூ.156 கோடியில் அலுவலகங்கள், குடியிருப்புகள்: முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in