9 ஆண்டுகளில் 1.20 லட்சம் வழக்குகளை முடித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்!

ஜி.ஆர்.சுவாமிநாதன்

ஜி.ஆர்.சுவாமிநாதன்

Updated on
1 min read

மதுரை: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த 9 ஆண்டுகளில் 1.20 லட்சம் வழக்குகளை விசாரித்து முடித்துள்ளார். உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்.

இவர் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றக்கோரிய வழக்கில் பிறப்பித்த உத்தரவு நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

நீதிபதிக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் விவாதங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றக்கோரி மக்களவை சபாநாயகரிடம் மனு அளித்தனர்.

இந்த மனு அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா கடும் ஆட்சேபனை தெரிவித்தார். உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஏராளமானோர் தாங்கள் நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதனுக்கு ஆதரவு தெரிவிப்பதாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்து வருகின்றனர்.

இந்த பரபரப்புக்கு இடையே நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் கடந்த 9 ஆண்டுகளில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் 1,20,426 வழக்குகளை விசாரித்து முடித்திருக்கும் விவரம் வெளியாகியுள்ளது.

இவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் 2017 முதல் 30.11.2025 வரை 2,138 ரிட் மேல்முறையீடு மனுக்கள், 3,751 நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள், 41,920 ரிட் மனுக்கள், 434 ஆள்கொணர்வு மனுக்கள், 540 குற்றவியல் மேல்முறையீடு, 18,392 குற்றவியல் மனுக்கள், 780 குற்றவியல் சீராய்வு மனுக்கள் உட்பட 73,505 பிரதான மனுக்களை விசாரித்துள்ளார்.

மேலும், 46,921 இதர வகை மனுக்களை விசாரித்துள்ளார். மொத்தம் 1,20,426 வழக்குகளை விசாரித்து முடித்துள்ளார் என தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக வழக்க றிஞர்கள் சிலர் கூறுகையில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதிமன்ற நேரம் தாண்டியும் வழக்குகளை விசாரிப்பார்.

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு காலை 10.30-க்கு தொடங்கும். ஆனால் ஜி.ஆர்.சுவாமிநாதன் பல நாட்கள் காலை 9 மணிக்கே விசாரணையை தொடங்கிவிடுவார் என்றனர்.

<div class="paragraphs"><p>ஜி.ஆர்.சுவாமிநாதன்</p></div>
உறைபனியால் காஷ்மீராக மாறும் கொடைக்கானல் - இரவில் மக்களை வாட்டும் கடுங்குளிர்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in