காஞ்சிபுரம் டிஎஸ்பியை கைது செய்ய உத்தரவிட்ட நீதிபதி செம்மல் இடைநீக்கம்

உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் நடவடிக்கை
நீதிபதி செம்மல்

நீதிபதி செம்மல்

Updated on
1 min read

சென்னை: ​காஞ்​சிபுரம் டிஎஸ்​பியை கைது செய்ய உத்​தர​விட்ட நீதிபதி செம்​மலை இடைநீக்​கம் செய்து உயர் நீதி​மன்ற தலை​மைப் பதி​வாளர் உத்தரவிட்டுள்ளார்.

காஞ்​சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிப​தி​யாக பணி​யாற்​றிய​வர் செம்​மல். அவரது தனி பாது​காவல​ராக இருந்த போலீஸ்​காரர் லோகேஷ்வரன் செங்​கல்​பட்டு மாவட்​டத்​துக்கு இடமாற்​றம் செய்​யப்​பட்​டார். இந்த நிலை​யில், பூசி​வாக்​கம் பகு​தி​யில் பேக்​கரி நடத்​தும் லோகேஷ்வரனின் மாம​னார் சிவக்​கு​மாருக்​கும், பேக்​கரிக்கு வந்த பட்​டியலின சமூகத்தை சேர்ந்த முரு​கன் என்​பவருக்​கும் தகராறு ஏற்​பட்டு மோதலில் முடிந்​தது.

இதுதொடர்​பாக இருதரப்​பும் வாலாஜா​பாத் காவல் நிலை​யத்​தில் புகார் கொடுத்​தனர். போலீஸ்​ காரர் லோகேஷ்வரன், அவரது மாம​னார் சிவக்​கு​மார் மீது வன்​கொடுமை தடுப்பு சட்​டத்​தின்​கீழ் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​தனர். ஆனால், அதன்​பிறகு அவர்​கள் மீது போலீ​ஸார் நடவடிக்கை எடுக்​க​வில்லை என்று குற்​றம்​சாட்​டிய நீதிபதி செம்​மல், இந்த வழக்​கில் காஞ்​சிபுரம் டிஎஸ்பி சங்​கர் கணேஷை கைது செய்ய உத்​தர​விட்​டார்.

தனது பாது​காவலர் லோகேஷ்வரனுடன் ஏற்​பட்ட தனிப்​பட்ட பிரச்​சினைக்​காக, டிஎஸ்​பியை கைது செய்ய நீதிபதி செம்​மல் உத்​தர​விட்​டுள்​ள​தாகக் கூறி காஞ்​சிபுரம் எஸ்​.பி. தரப்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. இந்த வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்ற நீதிபதி என்​.சதீஷ்கு​மார், டிஎஸ்​பியை கைது செய்யபிறப்​பித்த உத்​தரவை ரத்து செய்​து, நீதிபதி செம்​மல் விவ​காரம் குறித்து விசா​ரணை நடத்த உயர் நீதி​மன்ற விஜிலென்ஸ் பதி​வாள​ருக்கு உத்​தர​விட்​டார்.

அதன்​படி, விசா​ரணை நடத்​திய விஜிலென்ஸ் பதி​வாளர் தனது அறிக்​கையை உயர் நீதி​மன்ற நீதிப​தி​யிடம் சமர்ப்​பித்​தார். இதன் அடிப்​படை​யில், காஞ்​சிபுரம் மாவட்​டத்​தில் இருந்து அரியலூர் மாவட்ட லோக் அதாலத் நீதிப​தி​யாக செம்​மல் இடமாற்​றம்செய்​யப்​பட்​டார்.

இதற்​கிடையே, தனக்கு எதி​ரான விஜிலென்ஸ் விசாரணையை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில்செம்​மல் தாக்​கல் செய்த மனுவை உச்ச நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​தது. இந்​நிலை​யில், அரியலூர் மாவட்ட லோக் அதாலத் நீதிப​தி​யான செம்​மலை இடைநீக்​கம் செய்து உயர் நீதி​மன்ற தலைமை பதி​வாளர் உத்​தரவிட்​டுள்​ளார்​.

<div class="paragraphs"><p>நீதிபதி செம்மல்</p></div>
தமிழகத்தில் எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிக்க டிச.14 வரை அவகாசம் நீட்டிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in